Ticker

6/recent/ticker-posts

Life philosophy quotes in tamil

 தேவையற்ற போட்டிகள் உங்களை திசை திருப்பும் !


                 இங்கு நாம் எதிர்பாராமல் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக்கொண்டு  வாழ்க்கையை நடத்துகின்றோம். ஆனால் எதற்காக அந்தப் போட்டிகள் செய்கிறோம் என்றால் அவரை வென்றுவிட வேண்டும் என்பதற்காக மட்டுமே. ஆனால் அதற்குப் பின்னால் நம் வாழ்க்கை வீணாகி விடுகிறது நமக்கான தேவையை நாம் அடைய முடியாமல் போகிறது. 


ஒரு குட்டிக் கதை...... 


        ‘ஒரு நாள் வழக்கம் போல நான் ஜாகிங் செய்து கொண்டிருந்த போது, எனக்கு முன்னால் சற்றுத் தொலைவில் ஒருவர் ஜாகிங் பண்ணிக் கொண்டு போய் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.


அவர் கொஞ்சம் மெதுவாக ஓடிக் கொண்டிருந்தார் என்று தோன்றியது.


சட்டென்று மனதில் ஒரு எண்ணம்.


அவரை முந்திக் கொண்டு ஓடவேண்டும் என்று ஒரு உந்துதல். என் வீட்டுக்குப் போவதற்கு இன்னும் நான்கு ஐந்து தெருக்கள் தாண்ட வேண்டும். அதற்குள் அவரை பிடித்து விடலாம் என்று நினைத்து வேகமாக ஓட ஆரம்பித்தேன்.


மெதுமெதுவே அவரை நெருங்கிக் கொண்டிருதேன். அவரை முந்துவதற்கு இன்னும் சில 100 அடிகளே இருந்தன என் வேகத்தை சட்டென்று கூட்டினேன்.


இப்போது என்னைப் பார்ப்பவர்கள் நான் ஏதோ ஒலிம்பிக்ஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள பயிற்சி மேற்கொண்டிருக்கிறேனோ என்று நினைப்பார்கள்! அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற முடிவுடன் ஓடி…… ஓடி……அவரைப் பிடித்தே விட்டேன் கடைசியில்! உள்ளுக்குள் ஒரு பெருமிதம்!


‘அப்பாடி, முந்தி விட்டேன்!’


பின்னால் திரும்பிப் பார்த்தேன் அவர் போக்கில் அவர் வந்து கொண்டிருந்தார் அவருக்கு நான் அவருடன் போட்டி போட்டதே தெரியாது!


சந்தோஷம் சற்று அடங்கிய பின் தான் நான் என் பாதையை தவற விட்டு விட்டதை உணர்ந்தேன்!


அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஓடிய நான், நான் திரும்ப வேண்டிய தெருவை விட்டு விட்டு ஆறு தெருக்கள் தாண்டி வந்து விட்டேன்.


இப்போது வந்த வழியே திரும்பி அத்தனை தூரத்தையும் கடந்து நான் என் வீட்டிற்கு போக வேண்டும்.


இதேபோலத்தான் நம் வாழ்விலும் சிலசமயம் நடக்கிறது, இல்லையா?


நம்முடன் வேலை செய்பவர்களுடனும், அண்டை அயலில் இருப்பவர்களுடனும், நண்பர்களுடனும், குடும்பத்தவர்களுடனும் போட்டி போட்டு அவர்களை மிஞ்ச வேண்டும் என்றோ, அல்லது அவர்களை விட நாம் பெரியவர்கள் என்றோ நிரூபிக்க முயலும் போதும் இதே தான் நடக்கிறது இல்லையா?


நம்முடைய நேரத்தையும் சக்தியையும் மற்றவர்களை விட வெற்றிகரமானவர்கள் / முக்கியமானவர்கள் என்று நிரூபிப்பதிலேயே செலவழிக்கிறோம். நம்முடைய பொறுப்புகளை மறக்கிறோம். நாம் பயணம் செய்ய வேண்டிய பாதைகளை மறக்கிறோம்.


நமக்கென்று கடவுள் கொடுத்திருக்கும் வேலைகளை செய்யத் தவறுகிறோம்.


இந்த மாதிரியான ஆரோக்கியமில்லாத போட்டி முடிவில்லாத ஒரு சுழல். இந்தச் சுழலில் மாட்டிக் கொண்டுவிட்டால் வெளியே வருவது கடினம்.


எப்போதுமே நம்மைவிட சிலர் முன்னால் இருப்பார்கள்.


ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நம்மால் முடிந்த அளவு நல்லவர்களாக இருக்க நம்மால் முடியும், யாருடனும் போட்டி போடாமலேயே!


வாழ்க்கையில், பிறருடன் அனாவசிய போட்டியை தவிர்த்து நம் வாழ்க்கை ஓட்டப் பந்தயத்தில் கவனம் செலுத்துவோம். நாமும் நன்றாக வாழ்ந்து பிறரையும் வாழ விடுவோம்!


எல்லோரையும் துரத்துவதே வாழ்க்கை என்று நினைத்து சொந்த வாழ்க்கையை தொலைக்காமல் இருப்போம்.


வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவோம்!

          பூமியில் விதைக்கப்பட்ட விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து முளைத்துக் காட்டுகிறது!!!


           ஒவ்வொரு நாளும் காட்டில் சிங்கத்தால் கொல்லப்படுகின்ற நிலையில் உயிர் வாழும் மான் கூட பிரச்சனைகளை சமாளிக்கின்றது!!!


பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக விழுங்கப்படும் நிலையிலிருக்கும் சிறிய மீன்களும் கடலில் புலம்பாமல் வாழ்கின்றன!!!


              மனிதர்களால் எப்பொழுது வேண்டுமானாலும் வெட்டப்படுகின்ற வாழ்க்கையை அனுபவிக்கின்ற மரங்களும் நிமிர்ந்து நிற்கின்றன!!!


 ஒவ்வொரு நாளும் ஆகாரத்திற்காக பல மைல்கள் தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும் மனம் சலிப்படையாமல் முயற்சி செய்கின்றன!!!


            சிறியதான உடலையும், பல கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும் எறும்புகள் கூட துவண்டு போகாமல் வாழ்ந்து காட்டுகின்றன!!!


              தண்ணீரே இல்லாத பாலைவனத்தில் உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும் ஒட்டகங்களும், எங்கும் ஓடிப் போகாமல் அதில் வாழ்ந்து காட்டுகின்றன!!!


         ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை என்ற நிலையிலிருக்கும் பலவகை பூச்சிகளும், அந்த ஒரு நாளில் உருப்படியாக வாழ்கின்றன!!!


வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் அதை வாழ்ந்து காட்டுவதில் தான் உள்ளது. சிறப்போடும் மகிழ்ச்சியோடும் வாழ்ந்து காட்டுவோம். 

Post a Comment

2 Comments