Ticker

6/recent/ticker-posts

Walking benefits in tamil

உடற்பயிற்சியில் சிறந்தது நடைப்பயிற்சி


    தற்போதைய காலகட்டத்தில் உடல் உழைப்பு என்பது அவ்வளவாக இல்லை என்றே கூறலாம் இந்த உடல் உழைப்பு இல்லாததால் ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் வரக்கூடும் அந்தக் காலகட்டத்தில் நம் முன்னோர்கள் உடல் வலிமையோடு மற்றும் ஃபிட்டாக தங்கள் உடம்பினை வைத்து வைத்திருந்தனர் இதற்குக் காரணம் அவர்கள் உணவு பழக்கமும் உடல் உழைப்பும் தான் காரணம் அதனால்தான் அவர்கள் அதிக வயது வரை எந்த நோயும் இல்லாமல் வாழ்ந்தனர் ஆனால் தற்போது உள்ள மனிதர்கள் கம்ப்யூட்டர் முன்னாடியும் செல்போன் முன்னாடியும் தங்கள் பொழுதினை கழிக்கின்றனர் அதனால் உடல் உழைப்பு அங்கே காணப்படுவதில்லை இதனை சரிசெய்ய உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கம்  வேண்டும்.



இதயத்திற்கு நன்மை 

நடைப்பயிற்சியை (walking benefits) ஒருவர் தினமும் மேற்கொள்ளும் போது, இதயத் துடிப்பின் வேகம் அதிகரிக்கும். இதன் விளைவாக இரத்த ஓட்டம் அதிகரிக்கும், இரத்த அழுத்தம் கட்டுப்படும், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும் மற்றும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். இதனால் இதயத் துடிப்பு சீராகும்.



நோயெதிர்ப்பு சக்தி 

                  நடைப்பயிற்சியின் மூலம் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமைப்படுத்தப்படும். அதுவும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் இரத்த வெள்ளையணுக்களின் உற்பத்தி அதிகரித்து, நோயெதிர்ப்பு சக்தி வலுபெறும். ஆய்வுகளும் தினமும் நடைப்பயிற்சியை மேற்கொள்வோருக்கு சளி, காய்ச்சல் போன்றவை வரும் அபாயம் குறைவாக இருப்பதாக கூறுகிறது.


செரிமானம் மேம்படும்

                     நடைப்பயிற்சி செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் மற்றும் இரைப்பையில் சுரக்கும் செரிமான அமிலத்தின் அளவை அதிகரிக்க உதவும். இதனால் உண்ணும் உணவுகள் முழுமையாக செரிமானமடைவதோடு, உடலின் மெட்டபாலிச விகிதமும் அதிகரிக்கும். நடைப்பயிற்சி அஜீரண கோளாறைத் தடுப்பதோடு, இதர பிரச்சனைகளையும் தடுக்கும் தன்மை கொண்டது.

மூளை செயல்பாடு

நடைப்பயிற்சி மூளைச் செல்களின் செயல்பாட்டை அதிகரிக்கும். மேலும் இது மூளைத் திசுக்களின் அளவு குறைவதைத் தடுத்து, நினைவாற்றல் இழப்பு மற்றும் முதுமையில் வரும் டிமென்ஷியா போன்றவற்றின் அபாயத்தைத் தடுக்கும். குறிப்பாக காலையில் நடைப்பயிற்சி செய்வதினால் மூளையின் திறனை அதிகரித்து ஞாபக திறனை சிறப்பாக வைக்கிறது.தினமும் நடைப்பயிற்சியை மேற்கொண்டால்,  அல்சைமர் நோயின் தாக்கமும் தடுக்கப்படும்.

சுறுசுறுப்பாக்கும்

                 தினமும் நடைப்பயிற்சியை மேற்கொண்டால் பல்வேறு (walking benefits) நோய்களின் தாக்கத்தில் இருந்து விலகி இருக்கலாம். இதனால் மனதளவில் மட்டுமின்றி, உடலளவிலும் ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக இருக்கலாம். நடைப்பயிற்சி உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மற்றும் இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்கும். ஒருவரது இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகம் இருந்தால், அவர்களது உடலில் ஆற்றல் அதிகம் இருக்கும்.

மகிழ்ச்சியாக இருக்க 

பூங்காவில் பிடித்தமான இசையைக் கேட்டுக் கொண்டு நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் போது, மனதில் உள்ள பாரம் குறைந்து, மனம் ரிலாக்ஸாக இருப்பதை நன்கு உணர முடியும். மேலும் உடலில் ஆக்ஸிடோசின் உற்பத்தி அதிகமாகி, மனநிலை சிறப்பாக இருக்கும். இதனால் மன இறுக்கத்தில் மூழ்கும் அபாயம் குறையும். நடைப்பயிற்சி மிகச்சிறந்த ஒரு மன அழுத்த நிவாரணி மற்றும் நல்ல நிம்மதியான தூக்கத்தையும் தரும்.

வாழ்நாள் நீடிக்கும்

                           ஆய்வுகளில் தினமும் நடைப்பயிற்சியை மேற்கொள்வோர் ஆரோக்கியமான டயட்டையும் மேற்கொண்டால், அவர்களது வாழ்நாளில் இருந்து குறைந்தது 5-7 வருடங்கள் அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளது. நாம் சந்திக்கும் பெரும்பாலான பிரச்சனையை நடைப்பயிற்சியில் இருந்தே சரிசெய்யலாம். எனவே இத்தகைய நடைப்பயிற்சியை தினமும் மேற்கொள்ளத் தவறாதீர்கள்.

உடல் எடை குறையும்

                 நடைப்பயிற்சி என்பது (walking benefits) மிகச்சிறந்த உடற்பயிற்சி மற்றும் இது உடல் எடையையும் குறைக்க உதவும். அமெரிக்க ஆய்வாளர்கள், உடல் பருமன் கொண்டவர்கள் அனைவரையும் ஒருசேர தினமும் ஒரு குறிப்பிட்ட தூரம் நடந்து வர செய்தனர். 8 வாரங்கள் கழித்து, அவர்களது எடையைப் பரிசோதித்ததில், அதில் கலந்து கொண்டோரில் 50%-க்கும் அதிகமானோரின் உடல் எடை குறைந்திருப்பது தெரிய வந்தது. எனவே நீங்கள் உங்களது எடையைக் குறைக்க நினைத்தால் தினமும் குறைந்தது 30 நிமிடம் நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

தசைகள் வலிமைபெரும் 

ஒருவர் தினமும் நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் போது, அதன் விளைவாக தசை கொழுப்புக்களின் அளவு அதிகரிக்கும் மற்றும் தசைகள் நல்ல வடிவத்தையும் பெறும். மேலும் வியர்க்க வியர்க்க உடற்பயிற்சி செய்யாமலேயே கைகள், தொடைகள் மற்றும் பிட்டப் பகுதிகளை நல்ல வடிவத்துடன் வைத்துக் கொள்ள முடியும்.


சர்க்கரை நோய்

       சர்க்கரை நோயானது சர்க்கரை நிறைந்த பொருளை உட்கொள்வதால் வருவதல்ல. உடலுழைப்பு இல்லாத வாழ்க்கையை வாழ்வதால் தான் இந்த கோளாறு வருகிறது.
சர்க்கரை நோயை சரிசெய்ய தினமும் 3000 முதல் 7500 அடிகள் நடக்க வேண்டுமென ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர். அதாவது எப்போதும் உட்கார்ந்தவாறே இல்லாமல், சுறுசுறுப்பாக இருக்க கூறுகிறார்கள். எனவே சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தினமும் நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இதனால் சர்க்கரை நோயின் அபாயமும் தடுக்கப்படும்.

8வடிவ நடைப்பயிற்சி


எட்டு வடிவ நடைப்பயிற்சி மிகச்சிறந்த நன்மைகளை நமக்கு தருகின்றன இதனால் நம் உடலுக்கு தேவையான சக்திகளும் கிடைக்கின்றன. தினசரி இந்த பயிற்சி செய்வதால் அதிக தொல்லை தரும் வியாதிகள் நம் உடலை விட்டு வெளியேறும்.


8 வடிவ நடைப்பயிற்சி நன்மைகள் :-



  • பாதங்களும், கால்களும் பலம் பெறும். இப்பயிற்சியால், குதி கால் முதல் உச்சந்தலை வரை பயன் பெறுகிறது. 

  • கண் பார்வை மற்றும் செவித் திறன் அதிகரிக்கும். உடலினுள் செல்லும் பிராண வாயுவால் உடல் சக்தி பெறும்.

  • சுவாசம் தொடர்பான கோளாறுகள் உடலில் இருந்து வெளியேறும். மனமும், சுவாசமும் சீரடைவதால் இரத்த ஓட்டமும் சீராக நடைபெறும். குடலிறக்க நோயும் இதனால் குணமாகும்.

  • எட்டு நடைப்பயிற்சி தொடர்ந்து முப்பது நிமிடங்கள் செய்வதால் நல்ல தூக்கம் கிடைக்கும். ஒவ்வொரு முறையும் எட்டு போன்ற திருப்பத்தில் காலடி எடுத்து வைக்கும் போதும் உடல் சிறிது திருப்பம் அடைகிறது.

  • உடலின் எல்லாப் பகுதிகளும் சமமான அசைவுக்கு உட்படுகின்றன. சாதாரண நடை பயிற்சியால் உண்டாகும் உடல் சோர்வு, இந்த எட்டு நடையில் இருக்காது. எட்டு நடை அரைமணி நேரம் நடந்தால் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்ததுக்கு சமம்.

  • நேராக நடந்துவிட்டு வருவதை விட, எட்டு நடையால் கிடைக்கும் பலன்கள் அதிகம்.
நடைப்பயிற்சி செய்து நமது உடம்பினை நல்ல முறையில் வலிமை பெறவும் சீராக செயல்படவும் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வோம்.


Post a Comment

0 Comments