பூனை வரலாறு
பூனைகள் 10,000 ஆண்டுகளாக மனிதனால் பழக்கப்படுத்தப்படுவதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். முதன் முதலில் ஆப்ரிக்கர்களே பூனைகளை பழக்கப்படுத்தினர். ஆரம்பத்தில் எலிகள் உண்பதற்காகவே பூனைகள் பழக்கப்படுத்தப்பட்டன. பின்னர் அவை மனிதனுடன் பழகும் விதத்தினால் ஈர்க்கப்பட்டு வளர்க்கத் தொடங்கினர்.
பூனை வகை
பூனைகளில் இரண்டு வகைகள் உள்ளன. அவை காட்டுப்பூனை[Wild Cat], மற்றும் வீட்டுப்பூனை[House Cat] என்பனவாகும். காட்டுப்பூனை என்பது மாமிசம் மட்டுமே உண்ணும். வீட்டில் வளர்க்கப்படும் வீட்டுப்பூனையானது சைவ உணவையும் உண்ணும்.
பொதுவாக அனைத்து ஆண் பூனைகளும் டாம் Tom என்று அழைக்கப்படுகின்றன, அனைத்து பெண் பூனைகளும் ராணி என்று அழைக்கப்படுகின்றன. பூனைக் குட்டிகள் கிட்டன் kittan, கிட்டி kitty, புசிகேட் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
ஆயுட்காலம்
சமீபத்திய ஆண்டுகளில் பூனைகளின் சராசரி ஆயுட்காலம் உயர்ந்துள்ளது. 1980 களின் முற்பகுதியில், பூனையின் சராசரி ஆயுட்காலம் 7 வருடங்களாகவிருந்தது. 1995 இல் 9.4 ஆண்டுகள் உயர்ந்து, 2014 இல் 12-15 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. எனினும் பூனைகள் 30 வயது வரை உயிர்வாழ்ந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. உலகின் வயதான பூனை, க்ரீம் பஃப் Cream puff, 38 வயதில் இறந்தது.
கண்பார்வை
பூனைகள் சிறந்த இரவுப்பார்வையைக் கொண்டுள்ளன. குறைந்த அளவிலான ஒளியை டபீட்டம் லூசிடம் Tapetum Lucidum என்ற இமைப்பானது கண்ணின் விழித்திரைகுப் பின்னால் குவிப்பதால் குறைந்த அல்லது மங்கலான ஒளியிலும் துள்ளியமான பார்வைத்திறன் கொண்டுள்ளன. இவை மனிதனுக்குப் பார்க்கத் தேவைப்படும் ஒளியில் ஆறில் ஒரு பங்கு ஒளியிலேயே பார்க்கக்கூடிய திறன் படைத்தவை. பூனைகள் சிறந்த கேட்கும் திறனைக் கொண்டுள்ளதுடன் அவற்றால் பரந்த அளவிலான மீத்திறன் கொண்ட ஒலிகளையும் கேட்க முடியும். இவற்றால் மனிதன், நாய் என்பவற்றை விட உயர் சுருதியினாலான ஒலிகளைத் தெளிவாகக் கேட்க முடியும்.
பூனைகள் வெகுவாக மனிதனிடம் பழகக்கூடியவை. தனது அன்பினை வெளிப்படுத்த வாலை ஆட்டி, உரசித் தெரியப்படுத்தும். பெயர் சொல்லி அழைத்தால், கொஞ்சினால், சிரித்தால் புரிந்து கொள்ளும் திறன் பூனைகளுக்கு உண்டு. தம்மை வளர்ப்போரின் அருகே அடிக்கடி வந்து படுத்துக் கொள்வதும் உண்டு.
பூனைகள் மிகுந்த தன்சுத்தம் உடையவையாகும். பூனைகள் தனது ரோமங்களை நக்கி முழுமையாகச் சுத்தம் செய்யும். சுத்தம் செய்யும் போது நாக்கில் ஒட்டிக் கொண்டு வரும் ரோமங்களைப் பந்து போல் வாயில் எடுக்கும் திறன் பெற்றவை பூனைகளாகும்.
பூனைகள் மாமிசப் பட்சிகளாகும். வீட்டில் உள்ள பூனைகளுக்கு உணவு சரியான விகிதாச்சாரத்தில் கிடைக்கப் பெற வேண்டும். நாய்கள் உண்ணும் உணவை பூனைகள் சாப்பிடுமேயானால் அதன் பார்வை குறைபடும்.
பூனைகள் பற்றி சில:
> சராசரியாக பூனைகள் ஒரு நாளில் 70 சதவீதத்தை தூங்கியே கழிக்கின்றன.
> பொதுவாக பூனைகள், ஒரு உணவை மூன்று முறை ருசித்து சோதனை பார்த்த பின் நான்காவது முறை நம்பிக்கையுடன் அதனை உண்ணும்.
> பூனைகள் தனது உள்ளங்கால் வழியாக வியர்வையை வெளியேற்றுகின்றன.
> அவற்றின் சிறுநீர் இருட்டில் ஒளிரும் தன்மை கொண்டது.
> பூனைகளால் இனிப்பு பொருட்களை ருசிக்க முடியாது.
> பெண் பூனைகள் பொதுவாக வலது கால் பழக்கமுடையவை. மேலும் ஆண் பூனை இடது கால் பழக்கம் கொண்டவையாக இருக்கும்.
> பூனைகளுக்கு காலர் எலும்புகள் என்று சொல்லக்கூடிய கழுத்திற்கும் தோலுக்கும் இடையேயான எலும்புகள் கிடையாது.
> பூனைகளால் கடல் நீரை குடிக்க முடியும். அதன் சிறுநீரகங்கள் உப்பை வடிகட்டும் அளவிற்கு திறன் கொண்டவை.
#worldcatday
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி பூனைகள் தினம் World Cat Day கொண்டாடப்படுகிறது.
🐈🐈🐈🐈⬛🐕🐁


0 Comments