Ticker

6/recent/ticker-posts

Tiger பு‌லிக‌ள் பற்றிய தகவல்கள் பழமொழி

 புலிகள் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்


         ஆதிகால மனிதன் புலிகளோடு மற்றும் விலங்குகளோடு வாழ்ந்து வந்தான் அந்த விலங்குகள் காலப்போக்கில் அழிந்து கொண்டே வருகின்றன. சில கதைகளும்  பெரியவர்கள் கூறியிருப்பார்கள் அது என்ன என்றால் பெண்கள் வந்து முறத்தால் புலியை  விரட்டினார்கள் என்று சொல்வார்கள் அதுமட்டுமில்லாமல் தீப்பெட்டியில் அந்தப்படம் காணப்படுகிறது. இந்த புலியை பற்றி சில வியப்பூட்டும் தகவல்கள் உங்களுக்காக. 


புலி (Tiger) 

               புலி (Panthera tigris ) என்பது பூனைக் குடும்பத்தில் உள்ள மற்ற இனங்களை விட உருவில் மிகப்பெரிய இனமாகும். இது பெரும்பூனை என்ற பேரினத்தைச் சேர்ந்தது.

இது தனக்கென எல்லை வகுத்துக் கொண்டு வாழும் விலங்காகும். இது இரை தேடவும் தன் குட்டிகளை வளர்க்கவும் ஏதுவாக இருக்கும் வகையில் பெரும் பரப்பளவு நிறைந்த இடங்களில் வாழ்கின்றது. புலிக்குட்டிகள் தங்கள் தாயின் பராமரிப்பில் ஏறக்குறைய இரண்டு வயதுவரை வாழ்கின்றன. பிறகு அவை தாங்கள் வாழிடத்தை விட்டுப் பிரிந்து தங்களுக்கென எல்லையை வகுத்துக் கொண்டு தனியாக வாழப் பழகுகின்றன.


புலி இனம் 

      புலி இனத்தில் உள்ள எட்டு வகை கிளையினங்களில் இரண்டு அழிந்துவிட்டன.

                  Panthera tigris
                 1. வங்காளப் புலி
                 2. இந்தோசீனப் புலி
                 3. மலேசியப் புலி
                 4. சுமாத்திராப் புலி
                 5. சைபீரியப் புலி
                 6. தென் சீனப் புலி
அழிந்துவிட்ட கிளையினங்கள்
                 7. பாலினேசி புலி 
                 8. ஜாவாப் புலி

உணவு 

             புலிகள் ஒரு நாளில் 27 கிலோ கறியை உணவாக உட்கொள்ளும். பத்தில் ஒரு புலியின் வேட்டை தான் வெற்றியடையும். இதனால் புலிகளால் நீண்ட நாட்கள் உணவு உண்ணாமல் இருக்க முடியும். புலிகளுக்கு ஜீரண சக்தியும் குறைவு என்பதால் ஒரு நாள் எடுத்துக் கொள்ளும் கிலோ கணக்கிலான உணவினை செரிக்க தாமதமாகும்.

கண்கள் 

   பெரும்பாலும் புலிகளுக்கு மஞ்சள் நிறத்தில் தான் கண்கள் இருக்கும் வெள்ளைப்புலிகளுக்கு நீல நிறத்தில் கண்கள் இருக்கும் சில வெள்ளைப்புலிகளுக்கு மாறுகண் இருக்கும். மனிதர்களுக்கு தெரிவது போன்றே புலிகளுக்கு வண்ணங்கள் தெரியும்.


ராஜா 

           புலியின்(tiger) நெற்றியில் இருக்கும் வடிவத்திற்கு சீன மொழியில் ராஜா என்று அர்த்தமாம்!!!

கோடுகள் 

             மனிதர்களுக்கு இருக்கும் கை ரேகை போன்று தான் புலிகளின் உடலில் இருக்கும் கோடுகள். ஒவ்வொரு புலிக்கும் இது வேறுபடும்.

புலியின் உறுமல்

                       புலியின் உறுமல் மூன்று கிலோமீட்டர் தொலைவு வரை கேட்க முடியும்.

புலி ஓடும் வேகம்

                     புலிகள் மணிக்கு 65 கி.மீ வேகத்தில் ஓடக்கூடியது. புலியின் பின்னங்கால்கள் அதன் முன்னங் கால்களை விட நீளமாக உள்ளன. புலிகள் ஒரே தாவில் 20 – 30 அடி முன்னோக்கி பாயும் திறனைக் கொண்டது.

புலியின் வாழ்நாள்

          புலிகள் 10 முதல் 15 ஆண்டுகள் வரை வாழும். வேட்டையாடுதல் மற்றும் பிற விலங்குகளால் எந்த ஒரு பாதிப்பும் நேராமல் இருந்தால் காடுகளில் வாழும் புலிகள் 26 வருடங்கள் வரை வாழும்.


எல்லை 

             புலிகள் தான் வாழுமிடத்தைச் சுற்றி ஓர் எல்லையை வகுத்துக் கொள்ளும் இந்த எல்லைக்குள் பிற விலங்குகள் வராமல் பாதுகாக்கும்.
இந்த எல்லையை தன்னுடைய சிறுநீரால் வகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. புலியின் சிறுநீர் வாசத்தைக் கொண்டே எல்லைக்குள் இருப்பது ஆணா, பெண்ணா? அதன் வயது போன்றவற்றை பிற புலிகள் கண்டுபிடித்துவிடும்.

               இவ்வாறு புலிகளைப் பற்றி சிறப்பான செய்திகள் கூறப்பட்டாலும் பண்டைய காலத்தில் சில பழமொழிகளும் கூறப்பட்டுள்ளன புலிகளை வைத்து  அவை,

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்று கூறுவது உண்மையா?


       பொதுவாக நாய், பூனை போன்ற விலங்குகள் பிரசவ வலி மற்றும் அப்போது ஏற்படும் பசி காரணமாக தான் ஈன்ற குட்டிகளையே சாப்பிடும். ஆனால் புலி எவ்வளவுதான் பசித்தாலும் தான் ஈன்ற குட்டியை திங்காது. “புலி பசித்தாலும் பிள்ளையைத் திங்காது” என்ற சொல் மருவி புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்று மாறியுள்ளது.


உலக புலிகள் தினம் 

              உலக புலிகள் தினம் ஜூலை 29-ம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக அளவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் 80 சதவீதம் இந்தியாவில்தான் வாழ்கின்றன. இந்தியாவில் 50 இடங்களில் புலிகள் சரணாலயங்கள் உள்ளன.


Post a Comment

0 Comments