Ticker

6/recent/ticker-posts

Ayothi Ramar Temple

 அயோத்தி ராமர்

இராமாயண காவியத்தின்படி, இராமர் அயோத்தியில் பிறந்தார். 16ம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் ஆணையின்படி, இராமர் பிறந்த இடம் என்று கூறப்படும் இராம ஜென்ம பூமியின் தளத்தில் இருந்த குழந்தை இராமர் கோயில் இடிக்கப்பட்டு பாபர் மசூதி கட்டப்பட்டது. இராம ஜென்ம பூமி தொடர்பாக 1850களில் ஒரு வன்முறை சர்ச்சை எழுந்தது.


1980-களில் சங்கப் பரிவாரைச் சேர்ந்த விசுவ இந்து பரிசத் அமைப்பினர், இந்துக்களுக்காக ராம ஜென்ம பூமியை மீட்டெடுக்கவும், குழந்தை இராமருக்கு கோயிலைக் கட்டவும் ஒரு புதிய இயக்கத்தைத் தொடங்கியது. நவம்பர் 1989-இல், சர்ச்சைக்குரிய மசூதியை ஒட்டிய நிலத்தில் விசுவ இந்து பரிசத் இராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியது. 6 டிசம்பர் 1992 அன்று, விசுவ இந்து பரிசத் மற்றும் பாரதிய ஜனதா கட்சி 1,50,000 தன்னார்வலர்களை உள்ளடக்கிய ஒரு பேரணியை ஏற்பாடு செய்தது. பேரணி வன்முறையாக மாறியது, மேலும் கூட்டம் பாதுகாப்புப் படையினரை முற்றுகையிட்டு பாபர் மசூதியை இடித்தது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் விளைவாக இந்தியாவில் இந்து மற்றும் முஸ்லீம் சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட வகுப்புவாத கலவரங்களில் குறைந்தது 2,000 பேர் கொல்லப்பட்டனர். மேலும் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் கலவரங்கள் தூண்டப்பட்டன. மசூதி இடிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, 7 டிசம்பர் 1992 அன்று, த நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாள், பாகிஸ்தான் முழுவதும் 30க்கும் மேற்பட்ட இந்துக் கோயில்கள் தாக்கப்பட்டன, சில தீவைக்கப்பட்டன, ஒன்று இடிக்கப்பட்டது என்று செய்தி வெளியிட்டது. பாக்கிஸ்தான் அரசாங்கம் ஒரு நாள் போராட்டத்தின் போது பள்ளிகள் மற்றும் அலுவலகங்களை மூடியது. வங்காளதேசத்திலுள்ள இந்துக் கோவில்களும் தாக்கப்பட்டன. பாபர் மசூதி இடிப்புக்கு பழிவாங்கலின் போது பகுதியளவு அழிக்கப்பட்ட இந்த இந்துக் கோவில்களில் சில பின்னர் அப்படியே உள்ளன.

இந்தியத் தொல்லியல் துறையின் (ASI) 1978 மற்றும் 2003ம் ஆண்டு அகழ்வாராய்ச்சிகளில், பாபர் மசூதி இருந்த இடத்தில் இந்துக் கோயில் கட்டிட எச்சங்கள் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்தது.

 2019-ஆம் ஆண்டு அயோத்தி பிரச்சினை இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகுதான், சர்ச்சைக்குரிய நிலமானது இந்திய அரசால் நிறுவப்பட்ட ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டது.

முஸ்லீம்களுக்கு புதிய மசூதி கட்டுவதற்கு அயோத்தியிலிருந்த 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தன்னிபூர் கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. 5 பிப்ரவரி 2020 அன்று அயோத்தி இராமர் கோயிலைக் கட்டும் திட்டத்தை நரேந்திர மோதி தலைமையிலான அரசு ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை 2020ம் ஆண்டு மார்ச் மாதம் ராமர் கோயிலின் முதல் கட்ட கட்டுமானத்தை தொடங்கியது. கோவிட்-19 பெருந்தொற்று பரவலைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. கோயிலுக்கு அஸ்திவாரம் தோண்டும் போது ஒரு சிவலிங்கம், தூண்கள் மற்றும் உடைந்த சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. 25 மார்ச் 2020ல் முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் குழந்தை ராமர் சிலை தற்காலிக இடத்திற்கு மாற்றப்பட்டது. லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் கோயில் கட்டுமானத்திற்கு பொறுப்பேற்றது.

இராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் மாவட்டத்திலுள்ள பன்சி கிராமத்தின் மலையைக் குடைந்து 600 ஆயிரம் கன அடி மணற்கற்களைக் கொண்டு கட்டுமானப் பணிகள் நிறைவேற்றப்படும். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல மொழிகளில் ஸ்ரீராமர் பெயர் பொறிக்கப்பட்ட இருநூறாயிரத்திற்கும் மேற்பட்ட செங்கற்கள் வந்துள்ளன; இவை அடித்தளத்தில் பயன்படுத்தப்படும். கோயிலை உருவாக்க பாரம்பரிய நுட்பங்கள் பயன்படுத்தப்படும். பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகளைத் தாங்கும் அளவுக்கு அது வலுவாக இருக்கும் என்பது உறுதி செய்யப்படும். கோவில் கட்டும் பணியில் சிமெண்ட், இரும்பின் உபயோகம் இருக்காது. கல் தொகுதிகளை இணைக்க பத்தாயிரம் செப்பு தகடுகள் தேவைப்படும்.


இக்கோவில் கும்பாபிஷேகத்துக்குத் தேவைப்படும் 12 ஆலயமணிகளும் 36 பிடிமணிகளும் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் மூலம் நாமக்கல்லில் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏரலிலிருந்து இக்கோவிலுக்கு 650 கிலோ கொண்ட வெண்கலமணி அனுப்பப்பட்டது.

இந்த கோவில் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் சந்திரகாந்த் பி சோம்புராவால் வடிவமைக்கப்பட்டது.

70 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக கட்டப்பட்டு இந்த கோவிலின் முதற்கட்ட பணிகள் நடந்து முடிந்த நிலையில் கும்பாபிஷேகம் 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெற உள்ளது. Ayothi Ramar Temple கருவறையில் ராமர் சிலை ஆனது 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், மடாதிபதிகள், சாமியார்கள் என 10 ஆயிரத்துக்கும் அதிகமான பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். Ayothi Ramar Temple கருவறையில் நிறுவப்படும் 5 வயது குழந்தை வடிவ ராமர் சிலையை பிரதமர் மோடி எடுத்து வர உள்ளார்.

Post a Comment

0 Comments