Ticker

6/recent/ticker-posts

AC வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை

 வெயில் காலத்தை சமாளிக்க அனைவரும் ஏசி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பீர்கள் இதை முதலில் கவனித்துக் கொண்டு  பின்பு ஏசி வாங்கினால் மிகவும் நல்லது உங்கள் வருமானத்துக்கு ஏதுவாக AC வாங்க வேண்டும்.


எப்போதும் இல்லாதது போல, இந்த முறை ஜனவரி மாதம் முடிந்த பின்பும் கூட குளிர் நடுங்க வைத்துக் கொண்டிருந்தது. கடந்த சில நாட்களாக குளிர் குறைந்து வெயில் எட்டிப் பார்க்க தொடங்கிவிட்டது. காலையில் 10 மணிக்கு மேல் வெளியில் சென்றால் இது என்ன வெயில் காலமா என்று தோன்றுகிறது. சந்தேகமென்ன, வெயில் காலம் நெருங்கிவிட்டது.


மார்ச் தொடங்கிவிட்டால், வெயிலும் கொளுத்தத் தொடங்கிவிடும். வரப்போகும் கோடையை சமாளிக்க நீங்கள் வீட்டுக்கு ஏசி சாதனம் பொருத்துவதாக இருந்தால், பின்வரும் விஷயங்களை கவனித்து வாங்குங்கள்.


உங்களுக்கு எது பெஸ்ட?

எந்த அறைக்கு ஏசி தேவையோ, அந்த அறையின் அளவுக்கு ஏற்ப ஏசி மெஷினை தேர்வு செய்யுங்கள். 12*10 அடி அறை என்றால் 1.5 டன் ஏசி சரியாக இருக்கும். அதைவிட சிறிய அறை எனில் 1 டன் ஏசி- போதுமானது.


பெரிய அறைக்கு, குறைந்த டன் ஏசி மெஷினை வாங்கினால், அதிக வேலை செய்ய வேண்டியிருக்கும். விரைவில் பழுதாகும். சிறிய அறைக்கு அதிக டன் ஏசி மெஷினை வாங்கினால் அதிக குளிர், அவஸ்தை கொடுக்கும்.


அறையில் உள்ள ஜன்னல்கள், பீரோ எண்ணிக்கை, அறைக்கு மேல் மொட்டைமாடி உள்ளதா ஆகிய தகவல்களை விற்பனையாளரிடம் தெரிவித்து, அதற்கேற்றவாறு ஏசியை தேர்வு செய்யுங்கள்.


கவரில் பொருத்தப்படும் ஸ்ப்ளிட் ஏசி சிறந்தது. சத்தமும் வராது. மின்சார சிக்கனமும் கூட விண்டோ ஏசி என்றால் அதிக சத்தமும் கொடுக்கும், செலவும் வைக்கும்.


இதையும் கவனியுங்கள்

நீளமான அறை எனில், அதன் குறுகிய சுவரில் ஏசி மாட்டும் போது, டர்போ ஆப்ஷன் உள்ள மெஷினாக வாங்குங்கள் அதுதான் காற்றை அறை முழுவதும் செலுத்தும்,


ஃபில்ட்டர்களை எளிதாக சுத்தம் செய்யக்கூடிய ஏசியை வாங்கினால், அதை நீங்களே சுத்தம் செய்யலாம். இல்லையெனில், ஒவ்வொரு முறையும் சர்வீஸ் மேனை எதிர்பார்க்க வேண்டியிருக்கும்.


எளிமையாகக் கையாளும் வகையில் உள்ள ரிமோட் கண்ட்ரோல் ஏசியை தேர்ந்தெடுங்கள்.


எந்த பிராண்ட சிறந்தது?

பிராண்ட் ஏசி மெஷினை மட்டும் வாங்குங்கள். ஒருபோதும் அசெம்பில் ஏசி பக்கம் போய்விடாதீர்கள். அசெம்பில் ஏசியில் ஒரு உதிரி பாகம் பழுதானாலும், அதிக செலவு வைக்கும். அதுவே பிராண்ட் ஏசி எனில், குறைந்தது 2 ஆண்டு உத்தரவாதத்துடன் பழுதுபார்க்கும் சேவையும் கிடைக்கும்.


Bureau of Energy efficiency(BEE) or Energy Efficiency Rating (EER) என்று குறிப்பிடப்பட்ட ஏசி மெஷினுக்கு முன்னுரிமை கொடுங்கள். இவை மின்செலவை மிச்சப்படுத்தும்.


1 ஸ்டார், 3 ஸ்டார் மெஷின்களை விட5 ஸ்டார் கொண்ட ஏசிக்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை.


கொஞ்சம் கூலிங் டிப்ஸ்

ஏசி மெஷினுக்கு ஆண்டுப் பராமரிப்பு சேவை (ஏஎம்சி) வாங்கி வைப்பது நல்லது. குறிப்பிட்ட இடைவெளியில் சர்வீஸ் செய்வதால், ஏசியின் ஆயுள் அதிகரிக்கும்.


22.25 டிகிரி செல்ஷியஸ் வைத்தாலே போதுமானது. இது, 45% மின் செலவைக் குறைக்கும். அதற்கு கீழ் டிகிரியைக் குறைப்பது ஏசிக்கும் நல்லதல்ல, உங்களுக்கும் நல்லதல்ல.


சூரிய ஒளி நேரடியாக படாதவாறு ஏசி பொருத்தினால் 5% மின்செலவு குறையும். வெப்பத்தை உருவாக்கும் மின்சாதனப் (உ-ம்: டிவி, ஷோ லைட்ஸ்) பொருட்களை ஏசி அறையில் தவிர்ப்பது நல்லது.


ஏசியை சிறிது நேரம் ஓடவிட்ட பின், மின்விசிறியை ஆன் செய்யுங்கள். இது ஏசியின் குளிரை விரைவாக அறை முழுவதும் பரவச்செய்து மின்செலவைக் குறைக்கும். அறை நன்கு குளிர்ந்தபின், மின்விசிறியை ஆஃப் செய்து விடலாம்.


இதையெல்லாம் கவனத்தில் கொண்டு ஏசி வாங்கி பயன்பெறுங்கள் நன்றி வணக்கம்.

Post a Comment

0 Comments