Ticker

6/recent/ticker-posts

Income from goat rearing

 நீங்களும் ஒரு கோடி சம்பாதிக்கலாம்


படிக்காத பிள்ளைகளை நீ ஆடு, மாடு மேய்க்கத்தான் லாயக்கு" என்று பெரியவர்கள் திட்டுவது வழக்கம்.


ஆனால், ஆடு வளர்ப்பில் ஓர் ஆண்டுக்கு ரூ.1 கோடி கூட சம்பாதிக்க முடியும். என்பதுதான் இன்றைய நிலவரம். ஆம், முறையாக திட்டமிட்டு, தொடர் உழைப்பை செலுத்தினால் வெள்ளாடுகள் வளர்ப்பில் பெரிய அளவில் வருமானம் ஈட்ட முடியும். இவற்றை வளர்ப்பது எளிது. முதலீடும் குறைவு மழை குறைந்த வறண்ட நிலங்களில் கூட வெள்ளாடுகளை வளர்க்கலாம் என்பது கூடுதல் சாதகம். அப்புறமென்ன? வெள்ளாடு வளர்ப்பை பற்றி தெரிந்துகொள்ளலாமே.


வெள்ளாடு (goat)வளர்ப்பு முறை

              உங்களிடம் உள்ள சிறு இடத்திலேயே ஆடு வளர்ப்பில் ஈடுபடலாம். ஆடு வளர்ப்பில் மேய்ச்சல் முறை, கொட்டில் முறை என இரு வகைகள் உள்ளன. மேய்ச்சல் முறையில் ஆடு வளர்க்கும் போது பசுந்தீவன செலவு பெருமளவில் குறைகிறது. குறைந்த இடத்தில் ஆடுகளை வளர்க்க, கொட்டில் முறை சிறந்ததாக இருக்கிறது. தற்போது பரண் அமைத்து ஆடுகளை வளர்க்கும் முறை பிரபலமாகி வருகிறது.


             பொதுவாக செம்மறியாடு, வெள்ளாடு என இரண்டு ஆட்டினங்கள் வளர்ப்பிற்காக பயன்படுத்தப்படுகின்றன. செம்மறியாடு வகை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே குட்டி ஈனும், ஆனால், வேகமாக வளரும். வெள்ளாடுகள் ஆண்டுக்கு 2 முறை குட்டிகள் (சராசரியாக இரண்டு குட்டிகள்) ஈனும், தமிழகத்தில் கன்னி, தலசேரி மற்றும் கொடி ஆடுகள் போன்ற வெள்ளாட்டு இனங்கள் பரவலாக வளர்க்கப்படுகின்றன.


எப்படி தேர்ந்தெடுப்பது?

                வயது முதிர்ந்த ஆடுகளை வாங்கும் போது, அதன் பால் உற்பத்தி திறனை பார்த்து வாங்க வேண்டும். இளம் ஆடுகளை வாங்கும் போது, அதன் குட்டி ஈனும் அளவைப் பார்த்து வாங்குதல் வேண்டும். அதோடு வாங்கும் தாய் ஆடு எந்த உடல் குறைபாடும் இல்லாமல் இருக்க வேண்டும். ஆடுகளின் 120 நாள் பால் உற்பத்தி அளவை வைத்தும், 2 வருட வயதில் அது ஈனும் குட்டிகள் எண்ணிக்கையை வைத்தும் அதன் செயல்திறனை கணிக்கலாம்.


சராசரியாக 100 ஆடுகளை வளர்க்கும் போது, நீங்கள் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை வருமானம் ஈட்டலாம்.


ஆடுகளுக்கான கொட்டில் அமைப்பு

  • தரையிலிருந்து 4 அடி உயரத்தில் கிடைமட்டமான மரச்சட்டங்களைக் கொண்டு கொட்டில் அமைக்கவேண்டும்.


  • தாழ்வான மற்றும் அதிக மழைப் பொழியும் பகுதிகளில், தரைப் பகுதி சற்றே உயர்வாக இருக்க வேண்டும்.


  • கொட்டிலானது, 10 அடி உயரத்தில், நல்ல காற்றோட்ட வசதி கொண்டதாக இருக்க வேண்டும்.


  • ஆண் மற்றும் பெண் ஆடுகளை முறையே தனியாகக் கொட்டிலில் வைக்க வேண்டும். குட்டிகளுக்கென்று கொட்டிலில் ஒரு பகுதியை ஒதுக்கவேண்டும்.


  • ஒரே கொட்டிலில் அதிகப்படியான ஆடுகளை அடைத்து வைக்கக்கூடாது.


  • சுமார் 100 ஆடுகள் வளர்க்க 50 அடி நீளம், 45 அடி அகலம் கொண்ட கொட்டகை போதுமானது.


ஆடுகள் பராமரிப்பு

  • வெயில் காலங்களில் நிழலும், குளிர்ந்த நீரும் சரியான அளவில் தர வேண்டும்.

  • ஆட்டுப் பழுக்கை மற்றும் சிறுநீரை சரியானபடி அகற்ற வேண்டும்.

  • எல்லா ஆடுகளுக்கும் போதுமான அளவு இடம் ஒதுக்கித் தர வேண்டும்.

  • சினை ஆடுகளை தனியே பிரித்து பாராமரித்தல் வேண்டும்.

  • கொம்புகளை நீக்குதல், நகங்களை வெட்டுதல் போன்றவை ஆடுகளுக்கு காயம், கிருமித்தொற்று ஏற்படுவதிலிருந்து தடுக்கிறது,

  • நல்ல இறைச்சி உற்பத்திக்காக, ஆண் குட்டிகளுக்கு விரைநீக்கம் செய்ய வேண்டும்.

  • ஆடுகளை திறந்த வெளியில் 3-4 மணி நேரமாவது நடப்பதற்கு அனுமதிக்க வேண்டும்.

  • குட்டிகள் பிறந்தவுடன் தொப்புள் கொடியின் மறுநுனியை டின்ச்சர் (அ) அயோடின் கொண்டு நனைத்தல் வேண்டும்.


மருத்துவ பராமரிப்பு

  • குறைந்த அளவு உணவு எடுத்துக் கொள்ளுதல், அசாதாரணமாக நடந்து கொள்ளுதல் போன்றவை எல்லாம் ஆடுகள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதற்கான அறிகுறிகளாகும். அதைக் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

  • உடல்நிலை சரியில்லை என தெரிந்தால், உடனடியாக கால்நடை மருத்துவரின் உதவியை நாடவேண்டும்.

  • நோய்கள் எதுவும் தாக்காதவாறு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

  • பெரிய அளவில் நோய்க்குறி தென்பட்டால், மற்ற ஆடுகளிடமிருந்து தனித்து வைக்கவேண்டும். ஆடுகளுக்கு வயிறை சுத்தம் செய்யும் மருந்தை சீராக தந்து கவனிக்க வேண்டும்.

  • சுத்தமான, மாசுபடாத உணவு மற்றும் நீரை தர வேண்டும்.

  • தடுப்பூசி மருந்து அட்டவணைப்படி பரிந்துரைக்கப்பட்டவைகளை போட வேண்டும்.


1 கோடி வருமானம் 

              ஒரு ஆடு இரண்டு வருடத்தில் மூன்று முறை குட்டி ஈனும் ஈற்றுக்கு பொதுவாக இரண்டு குட்டிகள் ஈனும், சராசரியாக 500 ஆடுகள் வளர்த்தால், ஆண்டுக்கு 1500 குட்டிகள் கிடைக்கும். ஒரு ஆடு குறைந்தபட்சம் 27,000 வரை விற்பனையாகிறது. அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1 கோடியே 5 லட்சம் வருமானம் கிடைக்கிறது. பொதுவாக 50 ஆடுகள் வளர்க்க சராசரியாக ரூ.1.50 லட்சம் செலவாகும்.


         அந்த வகையில் 500 ஆடுகளுக்கு தீவன செலவு. பராமரிப்பு செலவு, உபகரணங்கள், மருத்துவ செலவு. காப்பீடு செலவு. கூலியாள் செலவு என மொத்தம் ரூ5 லட்சம் வரை செலவாகும்.


ஆடு வளர்ப்பில் கிடைக்கும் மொத்த வருமானத்தில் குறைந்தது 75 முதல் 80 சதவீதம் வரை லாபம் கிடைக்கும்.



Post a Comment

0 Comments