Ticker

6/recent/ticker-posts

Facebook history in tamil

 Facebook History 


இன்றைய காலகட்டத்தில் அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள், பெண்கள் என அனைவரும் பேஸ்புக் பயன்படுத்தி வருகின்றனர். இதில் நாம் போடும் பதிவுகள் உலகம் முழுவதும் வேகமாக பரவும். முகநூல் பக்கத்தில் இன்று என்ன போஸ்ட் போட்டுள்ளார்கள் என்று பார்ப்பதையே தினமும் வாடிக்கையாக இருந்து வருகின்றனர் மக்கள்.


14 மே, 1984-ல் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள வைட் பிளைன்ஸ்(White Plains) என்ற இடத்தில் Edward Zuckerberg(எட்வர்டு ஜுக்கர்பெர்க்) தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது‌. இந்த குழந்தைக்கு Mark Zuckerberg(மார்க் ஜுக்கர்பெர்க்) என பெயர் வைக்கிறார்கள். 


முகநூலை மார்க் சக்கர்பர்க் தன் நண்பர்களான எடுடாரோ சாவ்ரின், டஸ்டின் மாஸ்கோவிட் போன்ற ஹார்வர்ட் நண்பர்களுடன் தொடங்கினார். பிறகு ஐவி லீக், ஸ்டான்போர்டு பல்கலைக்கழக மாணவர்களும் முகநூலில் சேர்ந்தனர். பின்னர் ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் நிறுவன ஊழியர்களும் முகநூலில் சேர்ந்தனர். 2008ல்,முகநூலின் தலைமையகம் அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் தொடங்கப் பட்டது. 2010ல், முகநூலின் மதிப்பு 41 மில்லியன் டாலராக உயர்ந்து, கூகிள், அமேசானைத் தொடர்ந்து அமெரிக்காவின் மூன்றாவது பெரிய இணைய தள நிறுவனமாக உயர்ந்தது. 2011ல் முகநூலின் தலைமையகம் மென்லோ பார்க், கலிபோர்னியாவிற்கு மாற்றப்பட்டது. 13 வயதிற்கு மேற்பட்ட, சரியான மின்னஞ்சல் முகவரி உள்ள யாரும் முகநூலில் அங்கத்தினர் ஆகலாம்.


பிப்ரவரி 4, 2004 அன்று சுக்கர்பெர்க் அவரது ஹார்வர்டு ஓய்வறையில் இருந்து ஃபேஸ்புக்கை Facebook நிறுவினார். பிலிப்ஸ் எக்ஸ்டெர் அகாடமியில் அவரது நாட்களில் இருந்து ஃபேஸ்புக்கின் யோசனை அவருக்கு உதித்துள்ளது. பெரும்பாலான கல்லூரிகள் மற்றும் தனியார் பள்ளிகள் போன்று அங்கும் அனைத்து மாணவர்கள், பணியார்கள் மற்றும் ஆசிரியர்களை உடைய குழுப் புகைப்படங்களைக் கொண்டு ஆண்டுமலர் புத்தகத்தை வெளியிடும் நீண்ட-கால மரபுடைய வழக்கம் இருந்தது. அது "ஃபேஸ்புக்" facebook என அறியப்பட்டிருந்தது. கல்லூரியில் ஒருமுறை சுக்கர்பெர்க்கின் ஃபேஸ்புக்கானது "ஹார்வர்டு-நினைவு" என்ற போக்கிலேயே தொடங்கியது. பின்னர் சுக்கர்பெர்க் ஃபேஸ்புக்கை மற்ற பள்ளிகளுக்கும் பரப்புவதற்கு முடிவெடுத்தார். இதை அவரது அறைத் தோழர் டஸ்டின் மோஸ்கோவிட்ச் உதவியுடன் செய்தும் முடித்தார். ஸ்டார்போர்டு, டார்ட்மவுத், கொலம்பியா, கார்னெல் மற்றும் யால் ஆகிய பள்ளிகளில் முதலில் ஃபேஸ்புக்கை அறிமுகப்படுத்தினார். மேலும் பின்னர் ஹார்வர்ட்டின் சமுதாய இணைப்புடன் மற்ற பள்ளிகளுக்கும் அறிமுகப்படுத்தினார்.


முகநூல் நிறுவனம் 2,000 ஊழியர்களுடன், 15 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனர்கள் மற்றும் முன்னாள், இன்னாள் ஊழியர்களும் இதில் பங்குதாரர்களாக உள்ளனர். இந்த இணையதளத்தின் வருமானம் விளம்பரங்களின் மூலமாகவே கிடைக்கிறது. மற்ற பெரிய இணையதளங்களை விட விளம்பரங்களைப் பார்க்கும் கட்டணம், இதில் குறைவு. ஏனென்றால் இந்த இணையதளத்தை உபயோகிப்போர் இளைஞர்களாக இருப்பதால் அவர்களுக்கு நண்பர்களுடன் கலந்துரையாடவே விருப்பம். விளம்பரங்களைப் பார்க்க அவர்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை.


இந்தியாவில் இந்திய தகவல் தொழில் நுட்ப சட்டம் மற்றும் இந்திய ஒப்பந்த சட்டம் ஆகியவை 18 வயதுக்குட்பட்டவர்கள் பேஸ்புக் முதலான சமூக வலைத்தளங்களில் உறுப்பினராவதை ஏற்பதில்லை. இது சிறார் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும்.


முகநூல் உபயோகிப்பாளர்கள் தங்களுடைய புகைப்படம், சொந்த விருப்பங்கள், தொடர்பு கொள்ளும் விபரம் போன்ற தகவல்களைக் கோப்புகளாக இத்தளத்தில் பதிவு செய்யலாம். தான் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட தகவல்களை யாரெல்லாம் அறிந்து கொண்டார்கள், யாரெல்லாம் தன்னைப் பற்றிய தகவல்களைத் தேடினார்கள் என்று அறிந்து கட்டுப்படுத்தலாம்.


சமூகத்தில் முகநூலின் தாக்கம்

வியாபாரிகளும், நிறுவனங்களும் தங்களுடைய பொருள்களை மக்களிடம் அறிமுகப்படுத்தும் வழியாக முகநூலைக் கருதுகின்றனர்.

ஒரே எண்ணம்,விருப்பம் உடையவர்களை ஒன்றிணைக்கும் தளமாக உள்ளது.

பிரிந்து போன குடும்பங்கள் இந்த முகநூல் மூலம் ஒன்று சேர்ந்த நிகழ்வுகளும் உண்டு.

சிலர் நண்பர்கள், உறவினர்களிடம் தொடர்பு கொள்ளும் தளமாகக் கருதினாலும், வேறு சிலர் நேரடித் தொடர்பு இல்லாததால் முகநூல் மூலம் சமூகக் குற்றங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதுகின்றனர்.

விவாகரத்து, குழந்தைப் பேறு இல்லாமை போன்றவற்றிற்கும் இந்த இணையதளம் காரணமாக இருக்கிறது என்று கருதுவோர் சிலரும், இதை மறுப்பவர் சிலரும் உண்டு.

'த சோசியல் நெட்வொர்க்' The Social Network என்ற பெயரில் முகநூலைப் பற்றிய திரைப்படம் ஒன்றும் வெளி வந்துள்ளது.

   


    'ஐடியா என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்; ஆனால் அதை நடைமுறைப்படுத்தும் திறமை மற்றும் உழைப்பு சிலருக்கு மட்டும் தானே இருக்கும்'.


* >பேஸ்புக் மூலமாக மார்க், ஒரு நாளைக்கு 6-12 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை வருவாய் ஈட்டுகிறார். மேலும் Facebook மூலமாக மார்க் உலகின் 5-வது மிகப்பெரிய பணக்காராகவும் மாறி இருக்கிறார். மிக இள வயதில் உலக பணக்காரராக மாறிய முதல் மனிதர் மார்க் ஜுக்கர்பெர்க் தான். 


*> 2011 ஆம் ஆண்டில் Facebook மிகப்பெரிய வெப்சைட்டாக மாறி இன்று உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளது.


*> 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் $1 பில்லியன் டாலர் கொடுத்து இன்ஸ்ட்டாகிராம் Instagram நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது.


*> 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் $19.3 பில்லியன் டாலர் கொடுத்து வாட்ஸ் அப் Whatsapp நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது.


எதையும் அளவோடு பயன்படுத்தினால் அனைவருக்கும் நன்மை தரும். 


Post a Comment

0 Comments