Ticker

6/recent/ticker-posts

Funny comedy

 வாய்விட்டு சிரிங்க

             


இன்றைய காலகட்டத்தில் மக்கள் சிரிப்பதை மறந்து சம்பாரிக்க சென்று விடுகின்றன கொஞ்சம் சிரிப்பதற்கும் டைம் ஒதுக்க வேண்டும். 

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.


🌹

           கல்யாணமான புதுசுல என் மனைவி, தோசை சுடவா? இட்லி சுடவா?ன்னு கேப்பா.. இப்பல்லாம்..? தோசை சுட வா, இட்லி சுட வா'ன்னு கூப்பிடறா..

🌹

இன்னுமா சமையல் ஆகலே? நான் ஓட்டலுக்கு போறேன்... மனைவி:ஒரு அஞ்சு நிமிஷம் பொறுங்கோ..

அதுக்குள்ளே ஆகிடுமா?

இல்லே,நானும் புடவையை மாத்திட்டு உங்களோட வந்திடறேன்....

🌹

ஒரு உயிரின் மதிப்பு உயிருடன் இருக்கும் போது தெரியாது இறந்த பின்தான் தெரியும்...

உதாரணமாக

உயிருடன் கோழி ரூபாய் 100 உரித்த கோழி 160

வருத்த கோழி 300

🌹

கும்பகர்ணன் மாத கணக்கில் தூங்கினான் அது என்ன காலம்?

கொசுவே இல்லாத காலம்.

🌹

Wife: எதுக்கு spoon பாதிய உடைச்சிங்க.

Husband: Doctorதான் அரை Spoon மருந்து சாப்பிட சொன்னாங்க.

🌹

முள் குத்தினால் ஏன் இரத்தம் வருகிறது?

இரத்தம் யாரு குத்தனாங்கனு பார்க்க வருது.

🌹

ஆறும் ஆறும் சேர்ந்த என்ன வரும்?

வெள்ளம் வரும்.


🌹

மனைவி::எல்லை தாண்டிய பயங்கரவாதம் அப்படினா

என்னங்க???

கணவன்::நீ என்மேல

பூரிக்கட்டைய தூக்கி எறியும்

போது அது தெருவுல

போறவங்க மேல படுதுல்ல

அதான்..!

🌹

தங்க Chain உருவாக்கினால் தங்கம் வரும்.

வெள்ளி Chain உருக்கினால் வெள்ளி வரும்.

ஆனால் Cycle chain உருக்கினால் Cycle வருமா?

🌹

Hotelல காசு இல்லனு சொன்ன மாவு ஆட்ட சொல்லுவாங்க ஆனால் Busல காசு இல்லனு சொன்ன bus ஓட்ட சொல்லுவாங்களா?

🌹

பெண் வீட்டார்: மாப்பிள்ள என்ன பன்றார்

தரகர்: அவர் நின்னா ரயில் ஓடும் ரயில் நின்னா அவர் ஓடுவார்

அவ்வளவு பிஸியா?

ரயில்ல சுண்டல் விக்கிறார்

🌹

Friend 1 : ரொம்ப நாள் கழிச்சி உங்க வீட்டுக்கு வந்திருக்கேனே, வெறும் டீ மட்டும் தானா மச்சி?

Friend 2 : வேற என்ன வேணும்?

Friend 1 : கடிச்சிக்க ஏதாவது?

Friend 2 : நாய் இருக்கு அவுத்து விடவா?

🌹

அம்மா: டே ஏண்டா அப்பா பேரை பேபெர்ல எழுதி பிரிட்ஜ்ல வைக்கிற?

மகன்: நீ தானமா சொன்ன அப்பா பேர் கெடாம நடந்துக்கோ’ன்னு

🌹

நபர் 1: தண்ணியில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கறாங்க?

நபர் 2: அப்படி எடுக்கலைன்னா குளிக்கும் போது ஷாக் அடிச்சிரும்

🌹

தபால்காரர்: உங்க பார்சலை கொண்டுவர நான் ஏழு கிலோ மீட்டர் நடந்து வருகிறேன்

சர்தார்: ஏன் இவ்வளவு தூரம் நடக்கறீங்க பேசாம தபால்ல அனுப்பி இருக்கலாமே

🌹

சார் கள்ள நோட்டை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறதுன்னு உங்களுக்கு தெரியுமா ?’

தெரியாதே

‘ரொம்ப நல்லதா போச்சு இந்த நூறு ருபாய்க்கு சேஞ்சு கொடுங்க ’

🌹

நோயாளி : ஹலோ டாக்டர் உங்களை வந்து பார்க்கணும் நீங்க எப்ப ஃப்ரீ?

டாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது பீஸ் வாங்குவேன்

🌹

ஆசிரியர்: SOFTWARE ன்னா என்ன HARDWARE ன்னா என்ன?

மாணவன்: செடி’ய புடுங்குனா வருமே அது சாப்ட்வேரு

‘மரத்த’ புடுங்குனா வருமே அது ஹார்ட்வேரு சார்


🌹

ஒருவன் 2 நீச்சல் குளங்களை கட்டினான் ஒரு குளத்தில் தண்ணீர் நிரப்பாமலே

விட்டான் ஏன்னு கேட்டதற்கு

அது நீச்சல் தெரியாதவங்களுக்காகப்பா என்றான்

🌹

டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க

சர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?

🌹

போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?

டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார் நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்

🌹

வேலை கூட மனைவி போன்றது

கிடைத்தவுடன் வெளியேற முடியாது

உங்களிடம் ஒன்று இருந்தால், மற்றதைச் செய்ய முடியாது

மற்றும் ஒரு சிறப்பு விஷயம்

உங்கள் வேலையை விட மற்றவர்களின் வேலையை நீங்கள் விரும்புவீர்கள்

🌹

Sir, ஏன் படிச்சிட்டு இருக்கிற பையனை போட்டு இப்படி அடிக்கறீங்க ?

சும்மா இருங்க Sir,

Exam-க்கு கூட போகாம ஒக்காந்து படிச்சிகிட்டே இருக்கான்

🌹

நேத்து ஸ்கூலுக்கு வரலன்னு கேட்டதுக்கு உடம்பு சரியில்லன்னு சொன்னியே.. டாக்டர் சர்டிபிகேட் வாங்கிட்டு வர சொன்னேனே..வாங்கிட்டு வந்தியா..?

நான் எவ்வளவோ கேட்டு பாத்துட்டேன்.. அது அவங்க கஷ்டப்பட்டு படிச்சி வாங்கினதாம் அதனால் தரவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க மிஸ்.


#comedy

#funny 

#worldsmileday


World Smile Day 

உலக புன்னகை தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.



Post a Comment

0 Comments