நாய் நன்றி
நாய்கள் மனிதர்களை விரும்பி, மனிதர்களை அண்டி வாழ்கின்றன. நாய்கள் மனிதனின் நண்பன் என்று பரவலாக கருதப்படுகிறது. நாய்கள் மனிதர்களுக்குக் காவல் நாய்களாகவும், ஆடுமாடுகளை மேய்க்கப் பயன்படும் மேய்ப்பு நாய்களாகவும், வேட்டையாட உதவும் வேட்டை நாய்களாகவும், பனிப்பகுதிகளிலே சறுக்குப்பொதிகளை இழுத்துச் செல்வது போன்று பணிபுரியும் நாய்களாகவும் (இழுநாய்), கண்பார்வை இழந்தவர்களுக்குத் துணையாக வழிகாட்டு நாய்களாகவும், பல்வேறு வழிகளிலே துணை நிற்கின்றன.
நாய்களுக்குத் தமிழில் பல பெயர்கள் உள்ளன. நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டே திரிவதால் 'நாய்' Dog என்னும் பெயர் தமிழில் தோன்றியது. ஞாளி, ஞமலி என்பன நாயைக் குறிக்கும் சங்ககாலத் தமிழ்த் திசைச்சொற்கள் ஆகும்.
நாய்களுக்கு ஓரளவுக்கு அறிவுத்திறனும் மிக நல்ல மோப்பத் திறனும் உண்டு. மிகக்குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலிகளையும் (16–20 Hz) மிக அதிக அதிர்வெண் ஒலிகளையும் (70 kHz – 100 kHz) கேட்க வல்லவை. நாய்களுக்கு காணும் நிறத்தில், கருப்பு-வெள்ளையாக இருநிறப் பார்வை மட்டும் தான் உள்ளது என்று கருதுகிறார்கள். நாய்களின் மோப்பத்திறன் மிகவும் கூர்மையானது. நாய்களுக்கு 220 மில்லியன் நுகர்ச்சிக் கண்ணறைகள் (cells) இருப்பதாகக் கண்டுள்ளனர். ஆனால் மனிதர்களுக்கு சுமார் 5 மில்லியன் நுகர்ச்சிக் கண்ணறைகள் தாம் உள்ளன.
Dog love human heart ❤️ 💙 💜
நாய்கள் பற்றிய சில தகவல்கள் :
1. நாய்களின் வாழ்நாள் சுமார் 7 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை இருக்கலாம். இது பெரும்பாலும் நாயினத்தின் வகையும், வளர்ப்பு நிலைகளையும் பொருத்தது.
2. உலகிலேயே நாய்கள் செல்லப்பிராணிகளாக அதிகம் வளர்க்கப்படும் நாடு அமெரிக்கா. அமெரிக்காவில் உள்ள மூன்றில் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் நாயை செல்லப்பிராணியாக வளர்கிறார்கள். ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் 75 மில்லியன் நாய்கள் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன.
3. உலகில் தற்போது மொத்தம் 400 மில்லியன் நாய்கள் வாழ்கின்றன.
4. நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்ப்பது நமது ரத்த அழுத்தத்தை குறைக்கும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
5. நாய் குட்டிகளுக்கு 28 பற்கள் இருக்கும்.வளர்ச்சியடைந்த நாய்களுக்கு 42 பற்கள் இருக்கும்.
6. கார்னல் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வின்படி நாய்கள் சுமார் 9,000 ஆண்டுகள் முதல் 34,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்களால் வீட்டு விலங்காக வளர்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
7. மனிதர்களுக்கு கைரேகைகளில் வித்தியாசம் இருப்பது போலவே நாய்களின் மூக்கு ரேகைகளும் ஒரே மாதிரியாக இல்லை.
8. ஒரு சராசரியான நாய் ஒரு மணி நேரத்தில் 19 மைல்கள் வரை ஓடும் திறன் உடையது ஆகும்.
9. நாய்களால் மனிதர்கள் பேசும் வார்த்தைகளில் 1000க்கும் மேற்பட்ட வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியும்.
10. மஸ்டிப் என்ற நாய் இனம் தான் உலகிலேயே அதிக எடை கொண்ட நாய் இனமாகும்.இந்த வகை நாய்களின் சராசரி எடை 200 பவுண்டுகள் ஆகும்.
11. நாய்கள் அவைகளின் பாதங்கள் மற்றும் மூக்கின் வழியாக மட்டுமே வியர்வையை வெளிப்படுத்தும். இதை தவிர நாய்களின் மற்ற உடல் பகுதிகளில் வியர்வை சுரக்காது.
12. நாய்க்குட்டிகள் ஒரு நாளைக்கு 18 முதல் 20 மணிநேரங்கள் வரை தூக்கத்துக்காக மட்டுமே செலவு செய்யும்.
13. சராசரியாக ஒரு நாயின் அறிவுத்திறனானது, ஒரு 2 வயது குழந்தையின் அறிவுத் திறனுக்கு ஈடானது என்ற சுவாரஸ்யமான உண்மை தெரிந்து கொள்ளுங்கள்.
14. நாய்கள் ஏன் சுருண்டு படுகிறது தெரியுமா. நாய்கள் தங்களை சூடாக வைத்திருக்கவும், தன்னுடைய முக்கிய உறுப்புகளைப் பாதுகாக்கவும் சுருண்டு படுக்கிறதாம்.
15. உலக புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் இருந்த 12 நாய்களில் மூன்று நாய்கள் உயிர் தப்பினவாம் தெரியுமா.
16. அலாஸ்கன் மலாமுட் இன நாய்கள் 70 டிகிரி முதல் பூஜ்யம் டிகிரி வரை வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்டது.
17. நாயை செல்ல பிராணிகளாக வீட்டில் வளர்ப்பவர்களுக்கு இரத்த அழுத்தம் குறையுமாம்.
18. நாயின் மூக்குப்பகுதி காய்ந்து இருந்தால் அவற்றுக்கு காய்ச்சல் என்று அர்த்தம்.
19. நாய்கள் அருகம்புல்லை சாப்பிடும் பழக்கமுடையவை. அவற்றின் உடலில் ஏற்படும் பல உபாதைகளுக்கு அரும்கம்புல் மருந்தாகிறது. வீட்டில் வளர்க்கும் நாயை பூங்கா அல்லது புற்கள் இருக்கும் பகுதிகளுக்கு நிச்சயம் அழைத்துச் செல்ல வேண்டும்.
20. தனது குட்டிகளின் மீது அதிக பாசம் கொண்டவை. நாய்கள் பிரியமானவர்களை பிரிந்தால் கண்ணீர் விட்டு அழும்.
21. நாய் குட்டியை ஈனும் வரை ஒரே இடத்தில் வசிக்கும். குட்டியை ஈன்றதும் உடனடியாக மற்றொரு இடத்திற்கு மாற்றிவிடும் பழக்கம் கொண்டது.
#worlddogday
உலக நாய்கள் தினம் World Dog day ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது.



0 Comments