Youtube ஷார்ட்ஸ்
வணக்கம் இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் தொலைபேசிக்கு அடிமையாகி விட்டனர் முன்பொரு காலத்தில் புக்கும் கையுமாக இருந்தனர் ஆனால் தற்போது கைபேசியும் கையுமாக இருந்து வருகின்றனர்.
மொழி உருவாவதற்கு முன்பாக ஆதிமனிதன் கற்ற முதல் மொழி தான் காட்சி மொழி உலகின் முதல் மொழியான காட்சி மொழியால் தான் மக்களுக்கு தேவையானதை அளிக்க முடியும் என்று உருவாக்கப்பட்டது தான் யூடியூப் என்ற காட்சி மொழி வலைத்தளம்.
Youtube வரலாறு
Youtube நிறுவனத்தை தோற்றுவித்தவர்கள் சாட் ஹார்லி , ஸ்டீவ் சென் மற்றும் ஜாவேத் கரீம் ஆகியோரால் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது இந்த மூவரும் போபால் என்ற நிறுவனத்தில் ஆரம்பகால ஊழியர்களாக இருந்தனர் இந்த நிறுவனம் பிப்ரவரி 14 2005 அன்று தொடங்கப்பட்டது
யூட்யூபின் விரிவாக்கம் நவீன இணையத்தின் அடையாளங்களில் ஒன்றாகவும் பல பயனாளர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் மாறியது youtube ஒரு பெரிய சமூக தாக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது
கரீம் சாண்டியாகோ நகரில் உள்ள விலங்கியல் பூங்காவில் யானைகளுக்கு அருகில் வைத்து ஒரு வீடியோவை எடுத்து 'Me at the zoo' என்ற தலைப்போடு அந்த வீடியோவை யூடியூபில் பதிவிட்டார் இதுதான் youtube-ல் அப்லோட் ஆன முதல் வீடியோ ஆகும். வெறும் 19 வினாடிகள் மட்டுமே கொண்ட இந்த வீடியோவை ஆரம்ப காலத்தில் அதிக மக்கள் பார்க்கவில்லை.
Google வருகை
Youtube சட்ட சிக்கல்களையும் கோர்ட் கேசையும் சமாளிக்க முடியாமல் இறுதியாக கூகுள் முன்பாக பணிந்தது 2006 நவம்பர் 15ல் google நிறுவனம் youtube 1. 65 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியது.
அமெரிக்காவில் மட்டுமே செயல்பட்டு வந்த youtube 2008 மே 7ல் இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைத்தது youtube
Youtube வளர்ச்சி
கொரோனா லாக் டவுன் வந்த சமயத்தில் வீட்டில் வேலை இன்றி முடங்கி கிடந்த பலருக்கும் வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்தது தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டது யூடியூப் யூட்யூபை மக்கள் ஒரு வேலையாகவே செய்ய ஆரம்பித்தனர் நேரம் போகவில்லை என்றால் யூடி யூப் சமைக்கணும் என்றால் யூடியூப் சினிமா விமர்சனத்திற்காக youtube ஐ பயன்படுத்தும் மக்களின் அளவு உலக அளவில் அதிகரிக்க ஆரம்பித்தது .
தெரியாத ஒரு விஷயத்தை தேட கூகுளை நாம் எப்படி பயன்படுத்துகிறோமோ அதே போல தான் ஒரு விஷயத்தை வீடியோவாக தேட யூடியூபை தான் பயன்படுத்துகிறோம்.
ஒரு சாதாரண மனிதனையும் பட்டி தொட்டி எங்கும் தெரிய வைக்கிறது இந்த youtube தான் யார் என்று தெரியாமல் ஏதோ ஒரு மூலையில் இருந்த மதன் கௌரி, ஜி பி முத்து, டிடிஎஃப், ஸ்ரீராம் போன்றவர்களை இன்று உலகறிய செய்திருப்பது இந்த youtube தான்.
பெரிய வீடியோக்களை பார்ப்பவர்கள் அதன் முன்னோட்டத்தை சிறு வீடியோக்களாக வழங்கலாம் என்று ஆரம்பிக்கப்பட்டது தான் ஷார்ட்ஸ் வீடியோக்கள் இந்த வீடியோக்களும் வருமானம் வருகிறது இந்த வீடியோக்கள் 60 நொடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை நாள் ஒன்றுக்கு 30 பில்லியன் பார்வையாளர்களை youtube சார்ட்ஸ் பெற்றுள்ளது மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் 100 மில்லியன் டாலர் யூடியூப் சாட்ஸ் நிதியை அறிமுகப்படுத்தியது என்பதும் இது படைப்பாளர்களுக்கு மாதம் பத்தாயிரம் டாலர் வரை பணம் செலுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments