விலங்குகள் பற்றி தெரிந்ததும் தெரியாததும்
விலங்குகள் பற்றி நமக்கு அறியாத செய்திகள் பலவும் உள்ளன அதை ஆங்காங்கே படிக்கும் பொழுது கேட்கும்பொழுது விலங்குகளிடத்தில் இவ்வாறான செயல்பாடுகள் உண்டா என்று வியக்கத்தக்க வகையில் காணப்படுகின்றனர் இங்கே விலங்குகள் பற்றி அறிந்ததும் அறியாததும் மான சிலவற்றை தொகுத்து கூறியுள்ளோம்.
யானை (Elephant)
உலகில் இரண்டு வகையான யானைகள் உள்ளன ஒன்று ஆசிய யானை இன்னொன்று ஆப்பிரிக்கா யானை. ஆசிய யாணைகளில் ஆண் யானைக்கு தந்தம் உண்டு பெண் யானைக்கு தந்தம் இல்லை. ஆனால் ஆப்பிரிக்க யானைகளில் இரண்டுக்குமே தந்தம் உண்டு .
யானைகள் எப்பொழுதும் கூட்டமாக தான் வாழும் இந்த கூட்டத்திற்கு ஒரு பெண் யானைதான் தலைமை தாங்கும். யானைகள் தங்களுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் உணவு ஆகியவற்றிற்காக இடம்பெயர்ந்து கொண்டே இருக்கும். ஒரு யானை நாளொன்றுக்கு 250 கிலோ புல் இலை, தழைகளை உணவாக உட்கொள்ளும் அதற்கு குடிக்க 65 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். யானை மிகுந்த நினைவாற்றல் கொண்ட விலங்கு அது பாசம் நிறைந்த விளங்கும் கூட ஆகும்.
யானைகள் பொதுவாக மனிதர்களை தாக்குவது இல்லை அவற்றின் வழித்தடங்களில் குறிப்பிடும்போது தான் மனிதர்களை தாக்குகின்றன மேலும் யானைக்கு கண் பார்வை குறைவு கேட்கும் ஆற்றலும் மோப்ப ஆற்றலும் மிகுதியாக இருக்கின்றன. மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (70 ஆண்டுகள்). மனிதர்கள் தவிர்ந்த மற்றைய விலங்குகளில் இதுவே அதிக நாட்கள் வாழும் தரைவாழ் விலங்கு ஆகும். யானைகள் மிகவும் வலிமையானவை.
ஆண் யானைக்குக் களிறு என்று பெயர். பெண் யானைக்குப் பிடி என்று பெயர். யானையின் குட்டியைக் கன்று என்றோ, குட்டியானை என்றோ சொல்வர். யானை உரக்க எழுப்பும் ஒலியைப் பிளிறுதல் என்பர்.
கரடி (Bear)
கரடி அனைத்துண்ணி அது பழங்கள் தேன் போன்றவற்றை உண்பதற்காக மரங்களில் ஏறும் உதிர்ந்த மலர்கள் காய்கள் கனிகள் புற்றீசல் ஆகியவற்றையும் தேடி உண்ணும் கரையான் அதற்கு மிகவும் பிடித்த உணவு ஆகும். நன்கு வளர்ந்த கரடி 160 கிலோ எடை வரை இருக்கும்
கரடிகளின் கண்கள் சிறிதாக இருக்கும். இவை, குறைந்த பார்வைத் திறன் உடையவை ஆனால் நல்ல மோப்பத் திறனும் கேட்கும் திறனும் கொண்டவை; உடலில் அதிக முடிகளைக் கொண்டுள்ளன. மேலும் இவை இரண்டு கால்களினால் நிற்க வல்லவை. கரடிகள், வேட்டையாடவும் எதிரிகளைத்தாக்கவும் நீண்டு வளைந்திருக்கும் தங்கள் கூரான நகங்களைப் பயன்படுத்துகின்றன. இந்த நகங்களில் சகதியும் அழுக்கும் சேர்ந்திருக்கும். பாக்டீரியாக்கள் மிகுந்திருக்கும். எனவே இவற்றால் தாக்கப்படுபவரின் காயங்கள் எளிதில் குணமடையாது.
கோடை காலத்தில் கரடிகள் இனப்பெருக்கம் செய்கின்றன. இவற்றின் கர்ப்ப காலம் ஏழு மாதங்கள். ஒரு முறையில் இரண்டு குட்டிகள் பிறக்கும். குட்டிகளுக்கு இரண்டு அல்லது மூன்று வயதாகும் வரை அம்மாக் கரடிகள்தான் முதுகில் தங்கள் குட்டிகளைச் சுமந்து செல்லும்.
சிங்கம் (Lion)
சிங்கங்கள் நல்ல கேட்கும் திறன் கொண்டவை. மேலும் இதன் கர்ஜனை சுமார் 8 கிலோமீட்டர் (5 மைல்கள்) வரை கேட்கும் திறன் கொண்டது. பூனை இனத்தில் உள்ள விலங்குகளில் சிங்கம் கூட்டமாக வாழும் இயல்புடையது. மான், காட்டெருமை, வரிக்குதிரை, பன்றி முதலான விலங்குகளை வேட்டையாடி உண்ணும். பெரும்பாலும் பெண் சிங்கங்களே வேட்டையாடும். வேட்டையாடிய விலங்குகளை முழுவதுமாக உண்ணாமல் எலும்பு அதனையொட்டிய சதைப்பகுதிகளை அப்படியே விட்டுவிடும். அதனால் மற்ற விலங்குகள் (ஓநாய், கழுதைப் புலி முதலானவை) எஞ்சியவற்றை உண்டு வாழ்கின்றன.
நன்கு உண்ட சிங்கம் வேட்டைக்குப் பின்னர் பல நாட்களுக்கு வேட்டையாடுவதில்லை. ஆண் சிங்கங்கள் தம் கூட்டத்துக்கு என்று ஒரு எல்லையை உருவாக்கி வைத்துக் கொள்ளும். இதனை தன் வட்டத்தில் மலம், மூத்திரம் கழிப்பதன் மூலமும் கர்ஜிப்பது மூலமும் தன் நகத்தால் மரங்களில் கீரியும், இதுதான் தனது எல்லை என, மற்றைய சிங்கங்களுக்கும் பெரிய வகை ஊனுண்ணிகளுக்கும் தெரிவிக்கிறது. அவ்வாறு இருக்கையில் அருகில் இரை வரினும் பொதுவாக அவற்றைத் தாக்காது.
சிங்கங்களின் வாழ்நாள் பொதுவாக பத்திலிருந்து பதிநான்கு ஆண்டுகள் வரை இருக்கும். ஆண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 12 வருடங்களும் பெண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 16 வருடங்களும் ஆகும். ஆண் சிங்கம் 150-250 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். பெண் சிங்கம் 120-150 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.
மான் (Deer)
மான் ஆடு, மாடுகள் போல உண்ட உணவை இருநிலைகளில் செரிக்கும் அசைபோடும் விலங்குகள் வகையைச் சேர்ந்தது. மான்கள் உலகில் ஆஸ்திரேலியாவும் அண்டார்டிக்காவும் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வாழ்கின்றன. பார்ப்பதற்கு மிகவும் சாதுவாக இருக்கும். மான்களில் புள்ளிமான், சருகுமான், சம்பார் மான், கவரிமான் என நிறைய வகைகள் உள்ளன. கனடாவிலும் சைபீரியா முதலிய வடநிலப் பகுதிகளிலும் வாழும் மூசு அல்லது எல்க் என்னும் காட்டுமான் தான் உலகிலேயே மிகப்பெரிய மான் இனம் ஆகும். இவற்றின் ஆண் மூசு, 2 மீட்டர் உயரமும் 540 – 720 கிலோ கிராம் (1200–1600 பவுண்டு) எடையும் உள்ள மிகப்பெரிய விலங்காகும்.
மான்களில் பொதுவாக ஆண் மான்கள் மட்டுமே அழகான கொம்புகளைக் கொண்டிருக்கும். கொம்புகள் கிளைத்து இருப்பதால் ஆண்மானுக்கு கலை என்று பெயர் பெண்மானுக்கு சிறிய கொம்புகளோ அல்லது அவை இல்லாமலோ இருக்கும். பெண்மானுக்குப் பிணை என்று பெயர். மானின் குட்டிக்கு மான்மறி என்று பெயர்.
மான்களில் குட்டிகளைத் தாய் மானே வளர்க்கிறது. மானின் சினைக்காலம் பத்து மாதங்கள். மான்கள் ஆகஸ்ட் முதல் திசம்பர் வரையில் இணை சேர்கின்றன. ஒன்று அல்லது இரண்டு குட்டிகள் ஈனும். அரிதாக மூன்று குட்டிகளும் ஈனுவது உண்டு. மான் குட்டி பிறந்த 20 நிமிடங்களிலேயே நிற்க முடிகிறது. மேலும் ஒரு வாரம் குட்டிகள் புற்களுக்குள் மறைந்து வாழும். பின்னர் தாயுடன் நடக்கத் தொடங்கும். குட்டிகள் தாயுடன் ஓராண்டு வரை வாழும். ஆண் குட்டிகள் அதன் பின் தன் தாயை மீண்டும் சந்திப்பதில்லை. ஆனால் பெண் குட்டிகள் வளர்ந்து தங்கள் குட்டிகளுடன் வந்து கூட்டமாக வாழக்கூடும்.




0 Comments