Ticker

6/recent/ticker-posts

Coffee

 காப்பி குடிப்பதை தவிர்ப்பது நல்லது ஏன்?


மனிதர்கள் பொதுவாக காலையில் எழுந்தவுடன் டீ ,காபி குடிப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டு உள்ளனர். பாரதியார் கூறியிருப்பது போல காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு என்று கூறி இருப்பார் ஆனால் தற்போதைய உள்ள காலகட்டத்தில் மக்கள் எழும்போது காபி, டீ இருந்தால் தான் குடித்துவிட்டு படுக்கை அறையைவிட்டு எந்திரிப்பார்கள். மற்றும் டீ, காபி (Tea, Coffee) குடித்தால் தான் வேலையே செய்ய ஆரம்பிக்க முடியும் என்று பல மக்களும் இதற்கு அடிமையாக ஆகிவிட்டனர். இங்கு காபி குடிப்பதால் என்ன ஏற்படுகிறது என்று பார்ப்போம்.


ஆதி மனிதன் சிங்கத்தை கண்டால் உருவாகும் அதிர்ச்சி ஒரு காபியை குடிப்பதால் உருவாகிறது. ஆமாங்க!


1 லட்சம் ஆண்டுக்கு முன்பு நீங்கள் காட்டில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். எதிரே ஒரு சிங்கம்  அபாய எச்சரிக்கை மணியை அடிக்கிறது. உடனே அட்ரினலின், கார்ட்டிசோல் எனும் இரு ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் உடலில் சுரக்கின்றன. இந்த ஹார்மோன்கள் உடலை யுத்தம் அல்லது ஓட்டம் எனும் இரு நிலைகளுக்கு தயார் படுத்துகின்றன. ஓடுகையில் இதயத்துக்கு நிறைய ரத்தம் வேண்டும். அதனால் உங்கள் இதயம் அதிவேகத்தில் ரத்தத்தை பம்ப் செய்கிறது. பிளட் பிரஷர் BP அதிகரிக்கிறது. கொஞ்ச, நஞ்சம் இருந்த தூக்கமும் விடைபெறுகிறது. உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. சிங்கம் உங்களை துரத்துகிறது. நீங்கள் தாவி ஓடி மரத்தின் மேல் ஏறி தப்புகிறீர்கள். சிங்கம் ஏமாற்றத்துடன் அகன்றுவிடுகிறது. மரத்தின் மேல் இருந்து இறங்குகிறீர்கள். அட்ரினலின், கார்ட்டிசோல் அளவுகள் குறைகின்றன. இதயத் துடிப்பு நார்மல் ஆகிறது ரத்த அழுத்தம் குறைகிறது.


கிபி 2016: காலையில் எழுந்து ஒரு கப் காப்பியை குடிக்கிறீர்கள். உடனே அது உங்கள் உடலில் அட்ரினலின், கார்ட்டிசோல் எனும் இரு ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கலையும் சுரக்க வைக்கிறது. ஆதிமனிதன் சிங்கத்தை கண்டு பயப்பட்டபோது அவன் உடலில் நிகழ்ந்த மாற்றங்கள் அனைத்தும் இப்போதும் நிகழ்கின்றன. உடல் மிகப் பெரும் ஓட்டம் அல்லது போருக்கு தயார் ஆகையில் நீங்கள் இது இரண்டையும் செய்யாமல் நியூஸ்ப்பேப்பர் படிக்கிறீர்கள். உங்கள் இதயம் அதிவேகத்தில் ரத்ததை பம்ப் செய்கிறது. ஆனால் அதுக்கு எந்த பலனும் இல்லை நீங்கள் அடுத்து மெதுவாக குளிக்க செல்கிறீர்கள். 


அத்துடன் நிற்கிறதா? இல்லை அடுத்து 10 மணிக்கு இன்னொரு காபி உடல் மீண்டும் சிங்கத்தை கண்ட அதிர்ச்சியில் போருக்கு தயார் ஆகிறது. ஆனால் இப்பவும் சிங்கத்தை காணோம் நீங்கள் ஆபிஸில் பைலை பார்த்தபடி காபி குடிக்கின்றீர்கள்.


இப்படி ஒரு நாளுக்கு நாலைந்து தடவை உடலுக்கு சிங்கத்தை தரிசனம் செய்யும் அளவு அதிர்ச்சியை உடலுக்கு கொடுத்தால் என்ன ஆகும்?


அதிகரிக்கும் மன அழுத்தம், டிப்ரஷன், பிளட்பிரஷர், விரைவில் வயது ஆவது, உடல் உறுப்புகள் தளர்வது, மாரடைப்பு என அனைத்தும் மன அழுத்தத்தால் வரும் முடி கொட்டும், நரைக்கும் இளவயதில் முதுமை அடைவோம்.


போதாகுறைக்கு பெப்சி,கோக்கில் கூட இப்போது காஃ பின் சேர்க்கபடுகிறது. காபி சுவை உள்ள மிட்டாய்கள், ஐஸ்க்ரீம் கூட வருகின்றன. நம் உடலுக்கு பலத்த மன அழுத்தத்தை இவை அனைத்தும் உருவாக்கும்.


காபி என்பது புத்துணர்வு அளிக்கும் பானமல்ல அதிர்ச்சி அளிக்கும் பானம். தினம் 4 காப்பி குடிப்பது ஒரு அடிக்சன் அதை விட்டு தொலைப்பது தான் தப்ப ஒரே வழி.


காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும் இல்லை என்றால் அதற்கு தகுந்த வேலையை செய்ய வேண்டும்.



Post a Comment

0 Comments