Ticker

6/recent/ticker-posts

Insurance - காப்பீடு

      காப்பீடு

             வணக்கம் நண்பர்களே பொதுவாகவே மக்கள் உதவும் மனப்பான்மை கொண்டவர்கள் அது அந்த கால ஆதிமனிதன் முதல் தற்காலம் வரை உள்ள மனிதர்களிடம் உதவும் மனப்பான்மை என்பது இருந்துதான் வருகிறது. 


                   வாழ்க்கை எப்பொழுதும் தன்னுள் ஆச்சர்யத்தைப் பொதித்து வைத்துள்ளது. எதிர்பார்க்காத நிகழ்வுகள் நம்முடைய வாழ்வை எப்பொழுது வேண்டுமானாலும் தடம் புரளச் செய்து விடலாம். எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்பார்த்து அதை எதிர்கொள்ள நம்மைத் தயார்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனமாகும். அத்தகைய புத்திசாலித்தனமான ஒரு முயற்சியே காப்பீடு. எளிய வார்த்தைகளில் தெரிவிக்க வேண்டும் என்றால் காப்பீடு என்பது ஆபத்தைப் பறிமாற்றிக் கொள்ள உதவும் ஒரு அற்புத ஆயுதம் ஆகும்.

                      காப்பீடு என்பது நீண்ட நெடுங்காலமாகப் பல வடிவங்கள் மற்றும் முறைகளில் வழங்கப்பட்டு வருகின்றது. பண்டைய காலங்களில் இறந்தவர்களின் உடலைப் புதைக்கும் சடங்கைப் பின்பற்றி வந்த குழுக்களிடம் இந்தப் பழக்கம் நடைமுறையில் இருந்தது. அந்தக் குழுவில் இருந்த ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்பட்டது. அந்தத் தொகை சடலத்தைப் புதைக்கும் நபருக்கு ஏதேனும் ஒரு தீங்கு ஏற்பட்டால் அவருடைய குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. ஆபத்தைச் சந்திக்கும் நபருக்கான சன்மானமாக இது கருதப்பட்டது. இது ஒரு பழமையான காப்பீடாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் ஆபத்தை எதிர்கொள்ளும் ஒரு நபருக்கு, அந்தக் குழுவை சார்ந்த நபர்கள் அளிக்கும் பாதுகாப்பாகும். அந்த நேரத்தில் அது ஒரு பெரிய தொகையாக தெரியலாம் இவ்வாறு பண்டைய காலத்தில் இருந்து வந்தது.


            மனித இனம் தோன்றும்போது கூடவே தோன்றியதுதான் காப்பீடு என நாம் சில உணர்வுகளின் அடிப்படையில் கூறலாம். மனித சமுதாயத்தின் பொருளாதாரத்தில் நாம் இரண்டு வகையை அறிவோம். பணப் பொருளாதாரங்கள் மற்றும் பணம் அல்லாத இயற்கைப் பொருளாதாரங்கள் இரண்டாவது வகை முதல் வகையை விட மிகப் பழமையானது அந்த மாதிரியான பொருளாதாரம் , மற்றும் கூட்டு வாழ்க்கையில் நாம் காப்பீட்டை மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்ளும் வடிவில் காணலாம். உதாரணமாக, ஒரு வீடு எரிந்து விட்டால் அந்த சமுதாயத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் புதிய வீடு கட்ட உதவுவார்கள்.இதே மாதிரி ஒரு பக்கத்து வீட்டுக்காரருக்கு நேர்ந்தால் மற்ற பக்கத்து வீட்டுக்காரர் அதையே செய்யவேண்டும். இல்லாவிட்டால், அக்கம் பக்கத்தார் எதிர் காலத்தில் உதவி பெறமுடியாது.இன்றைய தினத்தில் இந்த மாதிரியான காப்பீடுகளில் நவீன பணப் பொருளாதாரத்துடன் நிதி சாதனங்கள் பரவாத சில நாடுகளில் இன்னும் இருந்து வருகிறது.


காப்பீடு வகைகள் : 

✓ வாகனக் காப்பீடு(Vehicle insurance)

    *Car insurance

    *Bike insurance

✓ இல்லக் காப்பீடு(Home insurance)


 ✓ மருத்துவக் காப்பீடு (Medical insurance)


✓ விபத்துக்காப்பீடு


✓ ஆயுள் காப்பீடு (life insurance)


               காப்பீடு என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம்  பண்டைய காலத்தில் ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மை கொண்டிருந்தனர் அதேபோல் இந்த காப்பீடும் நாம் ஒருவருக்கு உதவும் மனப்பான்மையில் செய்யப்படுகிறது பின்னர் நமக்கும் அந்த காப்பீடு தேவைப்படலாம் என்பதற்காக பலரும் இந்த காப்பீட்டில் சேர்ந்துள்ளனர். இது ஒரு வகை காப்பீடு மற்றவை சேமிப்பு காப்பீடு இன்னும் பல்வேறு காப்பீடுகள்  உள்ளன. 

               ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் என்று கூறுவார்கள் அதேபோல ஆபத்தில் நமக்கு காப்பீடு உதவும் என்று இந்த பதிவில் கூறிக் கொள்கிறேன். 


இந்தப் பதிவு வெப்சைட்டில் தேடி எழுதப்பட்ட சில பொதுவான கருத்துக்கள் மட்டுமே எந்த நிறுவனத்தையும் சார்ந்தது இல்லை நன்றி.


Post a Comment

0 Comments