Ticker

6/recent/ticker-posts

Bicycle - மிதிவண்டி உயிர்வண்டி

 சைக்கிள் பயணம் 


         வணக்கம் மக்களே உலகம் முழுவதிலும் உள்ள கிராமபுறங்களில் வாழும் மனிதர்களுக்கு இன்றளவும் முதன்மையான போக்குவரத்து வாகனமாக இருப்பது மிதிவண்டி (Cycle) என்று சொன்னால் அது மிகையில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை நகரம், கிராமம் என்ற பாகுபாடின்றி உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களின் முதன்மையான போக்குவரத்து வாகனமாக இருந்துவந்தது. 


"எவர் மிதித்தாலும் முன்னேறுவேன். என்றும் மிதிவண்டி போல் வாழ்க்கையில் முன்னேறுங்கள்."


          'மிதிவண்டிஈருருளி' (சைக்கிள்) மிதிக்கட்டைகளில் கால்களை வைத்து அழுத்தி உந்தப்படும் மனித ஆற்றலால் இயங்கும் ஒரு வண்டி. மிதிவண்டிகள் முதன்முதலாக 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகமாகின. தற்பொழுது உலகெங்கும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மிதிவண்டிகள் உள்ளன. உலகின் பல பகுதிகளில், குறிப்பாக சீனாவிலும் நெதர்லாந்திலும் போக்குவரத்திற்கான முதன்மையான வண்டியாக உள்ளது. 

     

 

            உந்து ஆற்றலை சக்கரத்துடன் சங்கிலியால் பிணைத்து இயக்கும் தற்போதைய மிதிவண்டிகளின் வடிவத்தை 1885 இல் அடைந்த பிறகு பெரும் மாற்றம் ஏதும் நிகழவில்லை. போக்குவரத்து தவிர, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருளாகவும் உடல் உறுதியை காப்பதற்காகவும், பாதுகாவற்பணிப் பயன்பாடுகளுக்காகவும், அஞ்சல் சேவைகளுக்கும், மிதிவண்டி விளையாட்டுக்களுக்கும் மிதிவண்டிகள் பயன்படுகின்றன.


                உலகில் முதன் முதலில் மிதி இயக்கி (Pedal) மிதிப்பதன் மூலம் இயங்கும் வகையிலான மிதிவன்டியை கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் (Krikpatric Macmillan) என்பவர் வடிவமைத்தார். ஆகையால்தான் இன்று மிதிவண்டியைக் கண்டறிந்தவராக கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் அடையாளப்படுத்தப்படுகிறார். ஸ்காட்லாந்து நகரில் பட்டறை ஒன்றில் கொல்லராக வேலை பார்த்து வந்த இவர் திசைமாற்றி , தடை மற்றும் மிதிஇயக்கி ஆகிய அனைத்து பாகங்களும் கொண்ட முழுமையான மிதிவண்டி ஒன்றை 1839-ஆம் ஆண்டு வடிவமைத்தார்.


"ஒரு கார் இருந்தால் ஆடம்பரமாக வாழலாம். ஒரு மிதிவண்டி இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம்."


சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள்:

* ✓சைக்கிள் ஓட்டும்போது, இதயத்துடிப்பு சீராகும். வயது முதிர்வு காரணமாக ஏற்படும் இதய வலுவிழப்பு, இதய அடைப்பு போன்ற பிரச்னைகள் தடுக்கப்படும். 


*✓ டைப் -1,  டைப் -2 சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். 


*✓ சைக்கிள் ஓட்டுவதால் கால் தசைகள், தொடைப்பகுதி தசைகள், எலும்புப் பகுதிகள், முதுகுத் தண்டுவடம், இடுப்புப் பகுதி போன்றவை வலிமைபெறும்.


*✓  ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்னைகள் வராது. உடல் எடையைக் குறைக்க உதவும். மூளையின் செயல்திறன் அதிகரிக்கும். 


*✓  மனதளவில் புத்துணர்ச்சி கிடைக்கும்.  மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற பிரச்சனை இருப்பவர்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.


*✓ அதிக வியர்வை வெளிப்படுவதால், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் குறையும்.


*✓ மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்றவற்றுக்கான முக்கியமான காரணி உடல்பருமன். சைக்கிள் ஓட்டுவதன்மூலம் உடல்பருமன் தடுக்கப்படுவதுடன் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைகிறது. ஸ்காட்லாந்தில் உள்ள க்ளாஸ்கௌவ் பல்கலைக்கழகம் (University of Glasgow) நடத்திய ஆய்வில், தினமும் அலுவலகத்துக்கு சைக்கிளில் செல்பவர்களுக்கு 45 சதவிகிதம்  புற்றுநோய் வராமல் தடுக்கப்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.


   சைக்கிளில் சென்று இயற்கையை ரசிப்பது தனி சுகம் தான் அதை சைக்கிளில் சென்று பார்த்தால்தான் தெரியும். காலங்கள் மாறுவதால் தற்போது எலட்ரிக் சைக்கிள் Electric bicycles வந்துவிட்டன. 


     ஆரோக்கியமான வாழ்க்கை வாழ தினமும் சைக்கிள் ஓட்டுங்க.....


ஜூன் 3 உலக மிதிவண்டி தினம்.



Post a Comment

0 Comments