Ticker

6/recent/ticker-posts

Medicinal properties of vegetables and fruits

 காய்கறிகள் மற்றும் பழங்களின் மருத்துவ குணங்கள்


           உடல் நலமாக இருந்தால்தான் மனம் நலமாக இருக்கும் உடலும் உள்ளமும் நலமாக இருந்தால் சிறந்த ஆரோக்கியமான வாழ்வு வளம் பெறலாம். அந்த வளமான வாழ்விற்கு பழங்கள் காய்கறிகள் மிகவும் அவசியமான ஒன்றாகும். 

இன்றைய இளம் தலைமுறையினர் பெரும்பாலும், பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகுகின்றனர். இதற்குக் காரணம்  ஊட்டச் சத்துடைய உணவுகளை அவர்கள் நாள்தோறும் சாப்பிடாதது தான்.


உடலுக்கு ஊட்டத்தை தருவதில் காய்கறிகளுக்கு மிக முக்கியப் பங்கு உள்ளது. பழங்கள் மற்றும் காய்கறிகளை அதன் மருத்துவ குணம் அறிந்து தினமும் உணவில் சேர்த்து வந்தால் நோயற்ற வாழ்வு உங்களது குடும்பத்திற்கும் சாத்தியமாகும். அந்த வகையில் எந்தெந்த உணவுப் பொருள்கள் என்னென்ன வியாதிகளை தீர்க்கிறது. வாருங்கள் காண்போம்.


> என்றும் 16 வயது மார்க்கண்டேயனாக வாழ, தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிடுங்க.


> தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு கொடி பசலைக் கீரை தரலாம்.


> இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ பயன்படும்.


> மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை.


> இதயத்தை பலப்படுத்தும் தாமரை.


> தோல் நோய்களை குணமாக்கும் கோரைப்புல்.


> இருமல், மூக்கடைப்பு போன்றவற்றை குணமாக்கும் கற்பூரவல்லி (ஓமவல்லி).


> மூட்டு வலியை குணமாக்கும் முட்டைகோஸ்.


> நீரழிவு நோயை குணமாக்கும் அரைக்கீரை.


> மூல நோயை குணமாக்கும் சப்போட்டா பழம்.


> வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் மணத்தக்காளி கீரை.


> உடலை பொன்னிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணிக் கீரை.


> மாரடைப்பு நீக்கும் மாதுளம் பழம்.


> குடல்புண்ணை ஓடஓட விரட்டும் தடியங்காய்.


> ரத்தத்தை சுத்தமாக்கும் அருகம்புல்.


> கேன்சர் நோயை குணமாக்கும் சீத்தாப் பழம்.


> மூளையின் வலிமைக்கு உதவும் பப்பாளிப் பழம்.


> நீரிழிவு நோயை குணமாக்கும் முள்ளங்கி.


> வாயு தொல்லையிலிருந்து விடுபட வெந்தயக் கீரை.


> நீரிழிவு நோயை குணமாக்க வில்வம்.


> ரத்த அழுத்தத்தை குணமாக்கும் துளசி.


> மூட்டுவலி, ரத்த சோகை நீக்கும் திணைமாவு.


> மார்பு சளி நீங்கும் சுண்டைக்காய்.


> மதுரக்கீரை சாப்பிட்டால் கேன்சர் வராது.


> சளி, ஆஸ்துமாவுக்கு ஆடாதொடை.


> ஞாபக சக்தியை கொடுக்கும் வல்லாரைக் கீரை.


> ரத்த அழுத்தத்தை குணமாக்கும் பசலைக் கீரை.


> ரத்த சோகையை நீக்கும் பீட்ரூட்.


> ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் அன்னாசிப் பழம்.


> முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை).


> மார்புசளி, இருமலை குணமாக்கும் தூதுவளை.


> முகம் அழகுபெற திராட்சைப் பழம்.


> அஜீரணத்தை போக்கும் புதினா.


> ‘பிளட் சுகரை’ விரட்டியடிக்கும் சர்க்கரை கொல்லியான சிறுகுறிஞ்சான்.


> பெண்களின் மாதவிலக்கு கோளாறுகளை சரிபடுத்தும் ஆவாரம்பூ.


> மஞ்சள் காமாலை விரட்டும் ‘கீழாநெல்லி’.


> சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் ‘வாழைத்தண்டு’.


> முகப்பருவை போக்கும் அம்மான் பச்சரிசி.


இப்படியாக நமது கலாச்சாரத்தில் உணவே மருந்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது. நாமும் மேற்கண்டவற்றை பின்பற்றி குறிப்பிட்ட வியாதிகளில் இருந்து விடுபடுவோம்.

ஒரு காலகட்டத்தில் உணவே மருந்தாக இருந்தது. ஆனால் தற்போது மருந்தே உணவாக இருந்து வருகிறது. காலங்கள் மாற மாற நோய்களும் மாறிவருகின்றன.


Post a Comment

0 Comments