Ticker

6/recent/ticker-posts

Foods Tamil names

 உணவுப் பொருட்களின் தமிழ் பெயர்கள்



    இந்த காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உணவுப் பொருட்களுக்கு ஆங்கிலப் பெயர்களை இட்டு வழங்கி வருகிறோம் ஆனால் அதற்கான தமிழ் பெயர் என்ன என்று கேட்டாள் ஒரு சிலருக்குத்தான் தெரியும் பலபேருக்கு அதற்கான தமிழ் பெயர் தெரியாது.

            காலங்கள் மாற மாற ஆங்கில வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளில் அதிக அளவில் சேர்த்து விட்டோம் அதிலிருந்து அந்த தமிழ் வார்த்தையை உணவுப் பொருட்களில் எப்படி வழங்குகிறோம் அதற்கான தமிழ் வார்த்தை என்ன என்பதை காணலாம்.


அறிந்தும், அறியாத தமிழ்ப் பெயர்கள் சில
தமிழில் டீக்கு ‘தேநீர்',

காபிக்கு ‘குளம்பி' என்று

பெரும்பாலோருக்குத் தெரியும்

மற்ற சில முக்கியமான உணவுப் பொருட்களின் தமிழ்ப் பெயர்களும் பின்வருமாறு :

1. சப்பாத்தி  -  - கோந்தடை

2. புரோட்டா - - புரியடை

3. நூடுல்ஸ் - - குழைமா

4. கிச்சடி - - காய்சோறு, காய்மா

5. கேக் - - கட்டிகை, கடினி

6. சமோசா - - கறிப்பொதி, முறுகி

7. பாயசம் - - பாற்கன்னல்

8. சாம்பார் - - பருப்பு குழம்பு, மென்குழம்பு

9. பஜ்ஜி - - தோய்ச்சி, மாவேச்சி

10. பொறை - - வறக்கை

11. கேசரி - - செழும்பம், பழும்பம்

12. குருமா --கூட்டாளம்

13. ஐஸ்கிரீம் – பனிக்குழைவு

14. சோடா -- காலகம்

15. ஜாங்கிரி - - முறுக்கினி

16. ரோஸ்மில்க் - - முளரிப்பால்

17. சட்னி - - அரைப்பம், துவையல்

18. கூல்ட்ரிங்க்ஸ் - - குளிர் குடிப்பு

19. பிஸ்கட் - - ஈரட்டி, மாச்சில்

20. போண்டா - - உழுந்தை

21. ஸர்பத் - - நறுமட்டு

22. சோமாஸ் - - பிறைமடி

23. பப்ஸ் - - புடைச்சி

24. பன் - - மெதுவன்

25. ரோஸ்டு - - முறுவல்

26. லட்டு - - கோளினி

27. புரூட் சாலட் – பழக்கூட்டு


 இந்த உணவு பொருள்கள் பலரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப் பொருள்கள் என்றே கூறலாம் இதில் இந்த உணவுப் பொருட்களுக்கு இதுதான் தமிழ் பெயரா என்று பலருக்கும் வியப்பாக இருக்கும்.

  இதில் இல்லாத பொருள்கள் தங்களுக்கு தெரிந்தால் கமெண்டில் கூறவும் நன்றி.



Post a Comment

0 Comments