Ticker

6/recent/ticker-posts

7 Wonders of the World

 உலக அதிசயங்கள்

அதிசயங்கள் என்பது மக்கள் மனதில் அழியாது நிலைத்து நிற்கக் கூடிய ஒன்றாகும். அதில் பண்டைய காலம் முதல் இந்த காலம் வரை சில அதிசயங்கள் இருந்து வருகின்றன. உலகளவில் சிறந்த ஒரு காட்சிப் பொருளாகவும் உலகம் முழுவதும் தேர்ந்தெடுக்கும் விதமாகவும் அமையப்பெற்றுள்ளன அதனால் இவை உலக அதிசயங்கள் என்று கூறப்படுகின்றன.

பண்டைய உலக அதிசயங்கள்


பண்டைய ஏழு உலக அதிசயங்களின் பட்டியல் மத்திய காலத்தில் ஏற்பட்டதாகக் கருதப்படுகின்றது. அண்டிப்பேற்றரின் பட்டியலில், இக்கலங்கரை விளக்கத்துக்குப் பதிலாக, பபிலோனின் சுவர்களே காணப்பட்டது. காலவரிசையில் அமைந்த பட்டியல் இது.



1. கிசாவின் பெரிய பிரமிட், பழங்கால எகிப்திய பாரோ (அரசன்) கூபுவின் சமாதியாகும் இது. கி.மு 2680ல் கட்டிமுடிக்கப்பட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

2. பபிலோனின் தொங்கு தோட்டம் மற்றும் பபிலோனின் சுவர் என்னுமிரண்டும், நெபுச்சட்னெஸ்ஸார் என்பவனால், கி.மு 600ல், ஈராக்கில் கட்டப்பட்டது.

3. ஒலிம்பியாவின் ஸேயுஸ் சிலை, இன்றைய கிரீஸில், கி.மு ஔஐந்தாம் நூற்றாண்டில், கிரேக்கச் சிற்பி, பீடியாஸ் என்பவரால் செதுக்கப்பட்டது.

4. ஆர்ட்டெமிஸ் கோயில், கி.மு 350ல், இன்றைய துருக்கியிலுள்ள எபேசஸ் என்னுமிடத்தில் கட்டப்பட்டது.

5. மௌசோல்லொஸின் மௌசோலியம், காரியாவின் பாரசீக சத்ரப்பினால், ஹலிகர்னாசஸ் என அழைக்கப்பட்ட, இன்றைய துருக்கியிலுள்ள போட்றம் என்னுமிடத்தில் கட்டப்பட்டது.

6. ரோடொஸின் கொலோசஸ், ஹெலியோசின் பிரம்மாண்டமான சிலை. தற்கால கிரீசில், கி.மு 280ல் உருவாக்கப்பட்டது.

7. அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம், இன்றைய எகிப்திலுள்ளது. கி.மு 3ஆம் நூற்றாண்டில், சொஸ்த்திராட்டஸ் என்பவரால் கட்டப்பட்டது.


புதிய உலக அதிசயங்கள்


உலகின் புதிய ஏழு அதிசயங்கள் (New 7 Wonders of the World, 2000-2007) என்பது உலகின் பழைய ஏழு அதிசயங்களின் யோசனையை புதிய அதிசயங்களின் ஒரு பட்டியலைக் கொண்டு புதுப்பிப்பதாகும். நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை என்னும் தனியார் நிறுவனம் பிரபலமுற்றவைக்கான கருத்துக்கணிப்பு ஒன்றினை ஏற்பாடு செய்தது, வெற்றி பெற்றவை 2007 சூலை 7 அன்று போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் அறிவிக்கப்பட்டன.

1. கிசா நெக்ரோபோலிசு
(சிறப்புத் தகுதி ) கிசா, எகிப்து கிமு 2589

2. சீனப் பெருஞ் சுவர்
சீன மக்கள் குடியரசு 
 கிமு 700

3. பெட்ரா ஜோர்தான் கிமு 312
கொலோசியம் (ரோம்)
Colosseo உரோமை நகரம், இத்தாலி கிபி 70

4. சிச்சென் இட்சா மெக்சிக்கோ   கிபி 600

5. மச்சு பிச்சு
Machu Picchu பெரு கிபி 1438

6. தாஜ் மகால் ஆக்ரா, உத்தர பிரதேசம், இந்தியா கிபி 1632

7. மீட்பரான கிறித்து
Cristo Redentor இரியோ டி செனீரோ, பிரேசில் கிபி 1926

பண்டைய உலக அதிசயங்களில் இன்றும் அழியாமல் இருக்கும் எகிப்தின் கிசா நெக்ரோபோலிசு சிறப்பு விருதைப் பெற்றது.


இவை மட்டும் அல்லாமல் இன்னும் பல்வேறு அதிசயங்கள் உள்ளன. அவைகளை இந்தப் போட்டிகளில் இடம்பெற்றன இருந்தபோதிலும் மிகவும் சிறப்பு வாய்ந்த ஏழு அதிசயங்களை தெரிவுசெய்து மக்களுக்கு எடுத்துக் காட்டியுள்ளனர். இந்த உலக அதிசயங்கள்.

Post a Comment

0 Comments