மைக்ரோசாப்ட் விண்டோஸ்
தற்போதைய காலகட்டத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாக மாறி வருகிறது அவற்றை பெரும்பாலும் மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் செல்போன் மற்றும் லேப்டாப் போன்றவை சாதாரணமாக இப்பொழுது அதிக அளவில் காணப்படுகின்றன. ஆனால் ஒரு காலகட்டத்தில் செல்போன் லேப்டாப் குறைந்த அளவில் ஏதாவது ஒருவரிடம் காணப்படும். காலங்கள் மாற மாற அனைத்துமே மாறுகின்றன.
அதேபோல இந்த செல்போன் மற்றும் லேப்டாப் கணினிகளுக்கு ஓஎஸ்(OS) எனப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் போட வேண்டும். அதில் முதன்மையான இடத்தை பிடித்துள்ளது மைக்ரோசாப்ட் விண்டோஸ்(Windows) ஆகும்.
இயங்குதளம் என்பது ஒரு Operating System கணினியில் இருக்கக்கூடிய வன்பொருள்கள் (Hardware) மற்றும் இன்ஸ்டால் செய்யக்கூடிய மென்பொருள்கள் (Software) ஆகியவற்றினை ஒருங்கிணைத்து செயல்பட வைக்கின்ற மிகப்பெரிய வேலையை செய்கின்ற அமைப்புதான் இயங்குதளம்.
மைக்ரோசாப்ட் நிறுவனம்(Microsoft Corporation) அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் ஓர் பன்னாட்டு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது உலகின் மிகப்பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. கணினிக்குத் தேவையான பலவகை மென்பொருட்களை தயாரிப்பது, மேம்படுத்துவது, உரிமை மற்றும் ஆதரவு அளிப்பது போன்ற செயற்பாடுகளை உடையது. வாசிங்டனில் உள்ள ரெட்மாண்ட் நகரத்தில் இதன் தலைமை இடம் உள்ளது. இதனை பில் கேட்சும், பவுல் ஆல்லெனும் ஏப்ரல் 4, 1975இல் நிறுவினர். வருமானத்தின் அளவுகொண்டு உலகின் மிகப்பெரும் மென்பொருள் மைக்ரோசாப்ட் விளங்குகிறது. உலகளவில் பங்குச்சந்தையில் மிகக்கூடுதலான மொத்தமதிப்பைக் கொண்டுள்ள நிறுவனமாகவும் இது விளங்குகிறது. விண்டோஸ் இயக்குதளங்கள், மைக்ரோசாப்ட் ஆபிஸ் ஆகியவை இதன் முக்கிய உற்பத்தி பொருட்கள் ஆகும்.
மைக்ரோசாப்ட் முதன் முதலில் 1985 நவம்பரில் மைக்ரோசாப்ட் டாஸ் இயங்குதளத்தின் ஆர்வம் காரணமாக வெளியிடப்பட்டது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் பிரத்தியேகக் கணினிகளில் தொண்ணுறு சதவீதத்திற்கும் (90-%) மேலாக சந்தையைக் கைப்பற்றியது.
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் (Microsoft Windows) பதிப்புக்கள்:
16 பிட் இயங்குதளம்
- வின்டோஸ் 1.0
- வின்டோஸ் 2.0
- வின்டோஸ் 3.0
- வின்டோஸ் NT 3.1
- வின்டோஸ் Workgroups 3.11
32 பிட் இயங்குதளம்
- வின்டோஸ் NT Workstation 3.5
- வின்டோஸ் 95
- வின்டோஸ் 98
- வின்டோஸ் 2000
- வின்டோஸ் மில்லேனியம்
- விண்டோஸ் சேவர் 2003
- விண்டோஸ் விஸ்டா
- விண்டோஸ் 7
- விண்டோஸ் ஹோம் சேவர்
- விண்டோஸ் சேவர் 2008 – 32 பிட் தளங்களுக்கான கடைசி விண்டோஸ் சேவர் மென்பொருள்.
- விண்டோஸ் 8
- விண்டோஸ் 10
64 பிட் இயங்குதளம்
- வின்டோஸ் XP
- வின்டோஸ் சேவர் 2003
- வின்டோஸ் விஸ்டா
- விண்டோஸ் சேவர் 2008
- விண்டோஸ் 7
- விண்டோஸ் 8
- விண்டோஸ் 10
ARM இயங்குதளம்
- விண்டோஸ் 8
- விண்டோஸ் 10
- விண்டோஸ் போன்
இதில் பெரும்பாலான மக்கள் விண்டோஸ் 7 இந்த இயங்குதளத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இந்த விண்டோஸ் இயங்குதளத்தில் கடைசியாக விண்டோஸ் 10 பதிப்பானது இயங்கி வருகிறது இதன் அடுத்த பதிப்பான விண்டோஸ் 11 தற்போது வந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
2011 இல் நடந்த Microsoft Worldwide Partner Conference இல் ஆண்ட்ரூலீ, மைக்ரோசாப்ட் மொபைல் தொழில்நுட்பத்தின் தலைவர் மைக்ரோசாப்ட் எல்லாச் சாதனத்திற்கு ஒரே இயங்கு தளம் உருவாக்குவோம் என்று சொன்னார்.
"கைபேசிக்கு ஓர் இயங்கு தளம், கணினிகளுக்கு ஓர் இயங்கு தளம், டேப்ளடுக்கு ஓர் இயங்கு தளம் என்று தனி இயங்கு தளங்களை உருவாக்க மாட்டோம். அவை அனைத்தும் ஒன்றாக வரும்."
கடைசியாக கடந்த 2015 -ம் ஆண்டு ஜூலை மாதம் Windows 10-ஐ அறிமுகப்படுத்திய பிறகு, கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் ஒரு புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டமை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட். விண்டோஸின் "அடுத்த தலைமுறை" என்று அழைக்கப்படும் இந்த Windows 11 அப்டேட், சிறப்பான ஒரு பெரிய மறுவடிவமைப்புடன் வருகிறது.
வரும் காலங்களில் கணினி மயம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது அதற்கு தகுந்தார்போல் நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
🌐💻வளர்க டெக்னாலஜி💿🌐






0 Comments