சிந்தனை துளிகள்
சிந்தனை மனிதனின் ஆற்றலை வெளிப்படுத்த உதவுவது இந்த சிந்தனையாகும். சிந்தனை என்பது எதைப் பற்றி என்பது கிடையாது எதை வேண்டுமானாலும் சிந்தனை செய்யலாம் அதில் வெற்றி அடைய வேண்டும் என்பதே ஒரே இலக்காக இருக்க வேண்டும்.
மண்ணில் போடப்பட்ட அனைத்து விதைகளும் ஒரே மண்னைத் தின்று ஒரே தண்ணீரைக் குடித்து வளர்கின்றன. ஆனால் மாமரம் கொடுக்கும் பழத்திற்கும் வேப்ப மரம் கொடுக்கும் பழத்திற்கும் ருசியில் வேறுபட்டு இருப்பது போல நாம் அனைவரும் ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள் தான். ஒரே நீரைத் தான் அருந்துகிறோம், ஒரே காற்றைத் தான் சுவாசிக்கிறோம். ஆனால் வழியில் எதை சேகரித்து நம்மில் உள்ளடக்கமாக அமைத்துக் கொள்கிறோமோ அதைப் பொறுத்துத் தான் நம்முடைய தன்மை வெளிப்படும்.
நாம் எதை சேர்க்கிறோம் அர்ப்பத்தையா? இல்லை அற்புதத்தையா?
அர்ப்பம் என்னும் ஆறு குணங்கள்
1. பேராசை2. சினம்3. கடும்பற்று4. முறையற்ற காமம்5. உயர்வு தாழ்வு மனப்பான்மை6. வஞ்சம்
அற்புதம் என்னும் ஆறு குணங்கள்
1. நிறை மனம்2. பொறுமை3. ஈகை4. ஒழுக்கம்5. சம நோக்கு6. மன்னிப்பு
இவை அனைத்திற்கும் அடித்தளமாக உள்ள அன்பை புரிந்து கொண்டால் அர்ப்பம் நம்முள் எட்டிப் பார்காது. அற்புதம் நம்மை விட்டு விலகிப் போகாது என்பதுதான் உண்மை.
பயனற்ற செயல்
🌧️கடலில் பெய்யும் மழை பயனற்றது.
🔥பகலில் எரியும் தீபம் பயனற்றது.
🎁வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது.
🍛நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது.
🍛பசியற்றவனுக்கு கொடுக்கும் அன்னதானம் பிரயோசனம் அற்றது.
🤡அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.
🐘பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது.
🕯️சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது.
🗻பெரிய மலை சிறிய உளியால் வெட்டி எடுக்கப்படுகிறது.
சில சமயங்களில் அனைவரிடமும் கலந்து ஆலோசனை செய்வதை விட எதை செய்யும் முன்னரும் அதனால் கிடைக்க பெறும் நன்மையையும் தீமையையும் நீ சிந்தனை செய்வதால் உனக்கான சிறந்த முடிவை நீயே அறிந்து கொள்வாய்.
இதன் மூலம் உருவத்தைக் கொண்டோ. அல்லது ஒருவரின் பணபலத்தைக் கொண்டோ… அல்லது வாயால் வெட்டி வீழ்த்தும் வார்த்தை ஜாலங்களைக் கொண்டோ ஒருவரை எடை போடக்கூடாது.
கிளை முதல் வேர் வரை நெய்யும் பாலும் ஊற்றி வளர்த்தாலும் வேப்ப மரத்தின் கசப்புத் தன்மை மாறாது. சிலரின் பிறவிக் குணம் என்பதை யாராலும் மாற்றவோ திருத்தவோ முடியாது.
திருத்துகிறேன் பேர்வழி என்று நேரத்தையும் சக்தியையும் வீணாக்கி வேதனையையும் வசவுகளையும் பெற்றுக் கொள்வதை விட நமக்கிருக்கும் கடமைகளையும் தேவைகளையும் கவனம் செலுத்துவதே சிறப்பு, வயதும் காலமும் தான் சிலருக்கு சில விஷயங்களை தெளிவாக உணர்த்துகிறது.
நீ வெற்றியைத் தேடி அலையும் போது வீண் முயற்சி என்று சொல்லும் அவர்கள் தான் நீ வெற்றி
அடைந்தவுடன் விடா முயற்சி என்று
சொல்லி வாழ்த்துவார்கள்.
வாய்ப்புகள் என்பது எப்போதும் அமைவது இல்லை. உனக்கான நேரம் வரும்போதோ அல்லது சந்தர்ப்பம் அமையும்போது கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி முன்னேறுபவனே இங்கு சாமர்த்தியசாலி ஆகிறான்.


0 Comments