Ticker

6/recent/ticker-posts

Palmyra Palm borassus-1- பனைமரம் பயன் தரும் மரம்

 பனைமரம் மாநில மரம் (பகு‌தி 1)


                உலகிலுள்ள மொழிகளுக்கு எல்லாம்  மூத்த மொழி ”நம் தமிழ் மொழி”.   நம் செந்தமிழ் எழுத்துக்கள்  முதன் முதலில் எழுதப்பட்டது பனை ஓலையில்தான் என்ற வகையில்  பனைமரம்  தமிழரின் அடையாளமாக உள்ளது.


               பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதினைக் காட்டிலும் பெரிதாகும். பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 – 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.



பனை தமிழ் நாட்டின் மாநில மரமாகும். நமது முன்னோர்கள் பனை மரத்தை ‘கற்பக விருட்சம்’ என்று பெயரிட்டு அழைத்தார்கள்.


பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவை


1. ஆண் பனை

2. பெண் பனை

3. கூந்தப்பனை

4. தாளிப்பனை

5. குமுதிப்பனை

6.சாற்றுப்பனை

7. ஈச்சம்பனை

8. ஈழப்பனை

9. சீமைப்பனை

10. ஆதம்பனை

11. திப்பிலிப்பனை

12. உடலற்பனை

13. கிச்சிலிப்பனை

14. குடைப்பனை

15. இளம்பனை

16. கூறைப்பனை

17. இடுக்குப்பனை

18. தாதம்பனை

19. காந்தம்பனை

20. பாக்குப்பனை

21. ஈரம்பனை

22. சீனப்பனை

23. குண்டுப்பனை

24. அலாம்பனை

25. கொண்டைப்பனை

26. ஏரிலைப்பனை

27. ஏசறுப்பனை

28. காட்டுப்பனை

29. கதலிப்பனை

30. வலியப்பனை

31. வாதப்பனை

32. அலகுப்பனை

33. நிலப்பனை

34. சனம்பனை


         ஓலைச்சுவடி எழுதப் பயன்படும், வாழ்நாளில் ஒரே முறை பூக்கும், 100 அடி உயரமுள்ள அரிய வகை கூந்த பனை மரம், பண்டைய காலத்தில் எழுதுவதற்கு தேவையான ஓலைச் சுவடிகள் தாழிப்பனை மரங்களில் இருந்து பெறப்பட்டன.


பனையின் பயன்கள் :

  • பனைமரம் உணவு மற்றும் உணவிலிப் பொருள்களை நல்குகிறது. உணவுப் பொருள்களில் பதநீர் முதன்மையானது. 
  • இதுவே கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்காய் எனப் பல்வேறு உணவுப் பொருள்களாக வடிவம் பெறுகிறது. 
  • பனந்தும்பு, தூரிகைகள், கழிகள், பனையோலைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், மரம், மரப் பொருள்கள் ஆகியன பனையிலிருந்து பெறப்படும் உணவிலிப் பொருள்களாகும்.
  • கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமக் கணக்கின்படி ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வாய்ப்புடையது.
  • மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.

பனை பொருள்களின் மருத்துவக் குணங்கள்: 

          வெயில் காலங்களில் உடம்பில் தோன்றும் வியர்க்கூர் மேல் நுங்குநீரைத் தடவினால் வியர்க்கூர் மறைந்துவிடும். தோலுடன் நுங்கைச் சாப்பிட்டால் வெப்பநோய்கள் குறையும். செரிமானத்தை அதிகப்படுத்தவும், உடல் சூட்டை தணிக்கவும், குடல் மற்றும் வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தவும் பதநீர் பயன்படுகிறது. தொண்டைப் புண்களை குணப்படுத்தவும், உடல் சூட்டைத் தணிக்கவும் பனங்கற்கண்டு பயன்படுகிறது. 
பனை வேர் தொழு நோயைக் குணப்படுத்தும் தன்மைகொண்டது. பனங்கொட்டையிலுள்ள வெண்மை நிற தேங்காய் போன்ற பருப்பு எலும்பு முறிவைக் குணப்படுத்தும் எண்ணெய் தயாரிக்கப் பயன்படுகிறது. 

கருப்பட்டி உடலுக்கு சுறு சுறுப்பை ஏற்படுத்தி மந்த தன்மையை போக்குகிறது. மேகநோய், ரத்த சோகை, காய்ச்சல், அம்மைச்சூடு, தண்ணீர் தாகத்துக்கும் கருப்பட்டி மருந்தாகும். பனங்கிழங்கு குளிர்ச்சித் தன்மை உடையது. மலச்சிக்கலைத் தீர்க்கக்கூடியது.

எலும்புச்சூடு நோய்க்கு சிறந்த நிவாரணி. கிழங்கை மாவாக்கி அதோடு கருப்பட்டியும் சேர்த்து உருண்டை பிடித்து தினமும் சாப்பிட்டால் உடலுக்கு வலு கிடைக்கும். கிழங்கை வேக வைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மாவாக்கி சாப்பிட்டு வந்தால் மெலிந்த தேகம் பருமனாகும். பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் வலுவடையும்.

பனம் பழத்தின் சாறு தோல் நோய்களுக்கு மிகவும் சிறந்தது. பனை மரத்தின் பாகங்கள் மருத்துவத்துக்கு மட்டுமல்ல வீட்டு உபயோகப் பொருட்களாகவும் நம் முன்னோர்கள் தொன்றுதொட்டு பயன்படுத்தி வந்தார்கள்.

அழகுப்பனை, பருவப்பனை 

   நன்கு காய்ந்த பனங்கொட்டையை விதைத்தால் மூன்று மாதங்களில் பனங்கன்று உற்பத்தியாகும். நட்ட ஒன்பது முதல் பத்து ஆண்டுகளில் பருவத்திற்கு வந்து விடும்.
நீர்ப்பாசன வசதி இருந்தால் விரைவில் வளர்ந்து விடும். 120 ஆண்டுகள் வரை பயன் தரும்.
பத்து ஆண்டுகளுக்கு பிறகு தான் ஆண், பெண் மரங்களை அடையாளம் காண முடியும்.
ஆண் பனையை 'அழகுப்பனை' என்றும், பெண் பனையை 'பருவப்பனை' என்றும் குறிப்பிடுவர். 'பாளை' மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் பனை ஆண் பனை. இதில் நுங்கு காய்க்காது. பெண் பனையில் மட்டும் தான் நுங்கு காய்க்கும். பெண் பனையில் ஆண் பனையை விட கூடுதலாக பதநீர் கிடைக்கும்.


பனை எந்த அளவிற்கு உயரமாக உள்ளதோ அந்த அளவிற்கு அதன் பயன்களும் அதிகமாக உள்ளன.


Post a Comment

0 Comments