ஒலிம்பிக் போட்டி
போட்டிகளில் கலந்துகொள்வது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று அந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் தான் தெரியும் அந்த வலியும், வேதனையும். பண்டைய காலம் முதல் இந்த காலம் வரை போட்டிகள் என்பது தொடர்ந்து கொண்டே வருகின்றன. அது மக்களோடு கலந்து விட்டன. சிறுவயது முதலே மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள் அந்த சிறு வயதில் தூண்டப்படும் ஆர்வம்தான் பெரிய அளவில் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு காரணமாக அமைகின்றன. அவ்வாறுதான் இந்த ஒலிம்பிக் போட்டிகளும்.
கிரேக்க நகரமான ஒலிம்பியாவில், கி.மு. 776-ம் ஆண்டு முதல் கி.மு. 393-ம் ஆண்டு வரை, ஜீயஸ் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வந்தன. ரோமாபுரியை சேர்ந்த தியோடோஷயஸ் ஆட்சிக்கு வந்ததும், இந்த போட்டி தடை செய்யப்பட்டது.
ஒலிம்பிக் போட்டியின் தந்தை (Olympics)
1894-ம் ஆண்டு ஜூன் 23-ந் தேதி நவீன வடிவம் பெற்று, ஒலிம்பிக் போட்டியாக மாறியது. இதனை ஒருங்கிணைத்தவர், பியரி டி கூபர்டின். இவரே ஒலிம்பிக் போட்டியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். முதன் முதலில் ஒலிம்பிக் கொடியை வடிவமைத்தவரும் இவர்தான்.
முதல் ஒலிம்பிக்
பண்டைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் (Olympic games) போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கிரீசு நாட்டின் ஒலிம்பியாவில் இருந்த சேயுசு கோவிலடியில் சமயமும், விளையாட்டும் சார்ந்த விழாவாக இடம்பெற்றது.
முதல் நவீன மயமான ஒலிம்பிக் போட்டி 1896-ம் ஆண்டு ஏதென்சில் நடைபெற்றது. ஒலிம்பிக் போட்டியானது ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. 1924-ம் ஆண்டு முதல் குளிர் கால ஒலிம்பிக் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது.
ஒலிம்பிக் விளையாட்டுகள்
- 1896 ஏதென்ஸ், கிரேக்கம்
- 1900 பாரிஸ், பிரான்சு
- 1904 செயிண்ட் லூயிஸ், ஐக்கிய அமெரிக்கா
- 1908 இலண்டன், இங்கிலாந்து
- 1912 ஸ்டாக்ஹோம், சுவீடன்
- 1920 ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்
- 1924 பாரிஸ், பிரான்சு
- 1928 ஆம்ஸ்டர்டாம், ஹாலந்து
- 1932 லாஸ் ஏஞ்சலீஸ், ஐக்கிய அமெரிக்கா
- 1936 பெர்லின், ஜெர்மனி
- 1948 லண்டன், இங்கிலாந்து
- 1952 ஹெல்சின்கி, பின்லாந்து
- 1956 மெல்போர்ன், ஆஸ்திரேலியா
- 1960 ரோம், இத்தாலி
- 1964 டோக்கியோ, ஜப்பான்
- 1968 மெக்ஸிகோ சிட்டி, மெக்சிக்கோ
- 1972 ம்யூனிச், ஜெர்மனி
- 1976 மாண்ட்ரீல், கனடா
- 1980 மாஸ்கோ, சோவியத் ஒன்றியம்
- 1984 லாஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா
- 1988 சியோல், தென் கொரியா
- 1992 பார்சிலோனா, எசுப்பானியா
- 1996 அட்லாண்டா, ஐக்கிய அமெரிக்கா
- 2000 சிட்னி, ஆஸ்திரேலியா
- 2004 ஏதென்ஸ், கிரேக்கம்
- 2008 பெய்ஜிங், மக்கள் சீனக் குடியரசு
- 2012 இலண்டன், ஐக்கிய இராச்சியம்
- 2016 ரியோ டி ஜனேரோ, பிரேசில்
உலகப் போர் சமயங்களில் மட்டும் (1916, 1940 & 1944) ஒலிம்பிக்ஸ் (Olympic games) போட்டிகள் நடைபெறவில்லை.
இதுவரை 31 ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 3 முறை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற நகரமாக லண்டன் விளங்குகிறது. 32-வது ஒலிம்பிக் போட்டி கடந்த 2020-ம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்றிருக்க வேண்டியது. ஆனால் உலக அளவில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த விளையாட்டு போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஜூலை 23-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 8-ந் தேதி வரை இந்த ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகிறது.
ஒலிம்பிக் தீபம்
ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நாளில் நடத்தப்படும் கோலாகலமான விழா, 1908-ம் ஆண்டு முதல் நடை முறையில் உள்ளது. ஒலிம்பிக் தீபம், முதன் முதலில் 1928-ம் ஆண்டு ஆம்ஸெடர்டம் என்பவரால் ஏற்றப்பட்டது. இந்த ஒலிம்பிக் தீபமானது, ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு பல மாதங்களுக்கு முன்பாகவே கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் ஏற்றப்படும். பின்னர் பல நாடுகளில் பல வீரர்களால் ஏந்திச் செல்லப்பட்டு, ஒலிம்பிக் போட்டி தொடங்கும் நாளன்று, ஒலிம்பிக் போட்டி நடைபெறும் மைய அரங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
ஒலிம்பிக் கொடி
ஒலிம்பிக் கொடியில் மொத்தம் 6 வண்ணங்கள் இருக்கும். வெள்ளை நிறத்தைப் பின்புலமாக கொண்ட கொடியின் மீது ஊதா, மஞ்சள், கருப்பு, பச்சை, சிவப்பு ஆகிய 5 நிறங்களில் வளையங்கள் வரையப்பட்டிருக்கும் இந்த வளையங்கள், ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய ஐந்து கண்டங்களைக் குறிக்கின்றன. இந்த கொடி 1920-ம் ஆண்டு தான் முதல் முதலாக பறக்கவிடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும், நவீன ஒலிம்பிக் போட்டி உருவாக்கப்பட்ட நாளான ஜூன் 23-ந் தேதியை, ‘உலக ஒலிம்பிக் தினம்’ என்று அனைவரும் கடைபிடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும் விளையாட்டுக்களை உள்ளடக்கிய நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கும் பொறுப்பும் அனைத்துலக ஒலிம்பிக் குழுவிடமே உள்ளது. ஒலிம்பிக் கொடி, தீப்பந்தம் போன்ற சின்னங்களும், தொடக்கவிழா, நிறைவுவிழா போன்ற நிகழ்வுகளும் ஒலிம்பிக் போட்டிகளின் பகுதிகளாக உள்ளன. கோடைகால ஒலிம்பிக்கிலும், குளிர்கால ஒலிம்பிக்கிலும் 33 வெவ்வேறு விளையாட்டுக்கள் தொடர்பில் இடம்பெறும் ஏறத்தாழ 400 போட்டிகளில் 13,000க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறும் வீரர்களுக்கு முறையே தங்கப் பதக்கம், வெள்ளிப் பதக்கம், வெண்கலப் பதக்கம் ஆகிய பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.




0 Comments