Ticker

6/recent/ticker-posts

Housewarming - கிரஹப்பிரவேசம்

         புதுமனை புகுவிழா


      புதுமனைப் புகுவிழா என்பது புதியதாக வீடு கட்டி முடித்ததும் நல்ல நாள் பார்த்து அவ்வீட்டில் முதன்முதலாக குடியேறும் போது செய்யும் விழா ஆகும். 

           "வீட்டை கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்" என்று சொல்வார்கள் ஏனென்றால் இரண்டுமே அவ்வளவு எளிதானதல்ல அடித்தளம் உறுதியாக போட வேண்டும் அப்பொழுதுதான்  ஆலமரம் போன்று உறுதியாக காணப்படும்.

          

           பால் காய்ச்ச அதிகாலை வேலைதான் செய்வார்கள் ஏனென்றால் அதிகாலையில் எந்தவித இரைச்சலும் இல்லாமல் அமைதியாக காணப்படும். என்பதற்காகவும் அதுமட்டுமில்லாமல் அதிகாலை வேளையில் புத்துணர்ச்சியாக நாம் செயல்படுவோம் என்பதற்காகவும் இவ்வாறு கூறப்படுகிறது. 

         
       குறிப்பாக நீங்கள் பால் காய்ச்சப் போகும் அந்த நாளுக்கு, முந்தைய நாள் வீட்டை இப்படி சுத்தப்படுத்தி விடுங்கள் அவ்வளவுதான். அதன் பின்பு அந்த வீட்டில் பால் காய்ச்சும் போது கட்டாயமாக ஒரு வெற்றிலையின் மேல் மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து தான் பால் காய்ச்ச வேண்டும். காலையில் பால் காய்ச்சி முடித்துவிட்டு அந்த மஞ்சள் பிள்ளையாரை அப்படியே உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்க வேண்டும்.


              பால் காய்ச்சிய அடுத்த நாள், அந்த மஞ்சள் பிள்ளையாரை எடுத்து கொஞ்சம் தண்ணீரில் போட்டு கரைத்து அந்தத் தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து விடுங்கள் போதும். இந்த பரிகார முறையினை நீங்கள் சொந்த வீட்டிலும் பின்பற்றலாம். வாடகை வீட்டுக்கு குடி போனாலும் பின்பற்றிக் கொள்ளலாம்.


பால் காய்ச்சுதல்:-


                  ஒன்பது செங்கற்கள் அல்லது4-ஐ வைத்து பூ சந்தனம் குங்குமம் வைத்து புதிய பால் பாத்திரத்தில் பொட்டு வைத்து பால் ஊற்றி காய்ச்ச வேண்டும். பால் பொங்கி வந்த பின் கைகூப்பி வணங்கவும். கிரகப்பிரவேசம் நடத்தப்படும் இடத்தில் சாமி படத்தின் முன்பாக காய்ச்சிய பாலை வைத்து கணபதி, குலதெய்வம், இஷ்ட தெய்வம், லட்சுமி, சரஸ்வதியை நினைத்து நிவேதனம் செய்து ஆரத்தி காட்ட வேண்டும்.

🔯ஓம் கம் கணபதியே நம.

சுவாகா ஓம் வக்ர துண்டாய

ஹீம் நமோ ஏரம்ப மதமோதித

மம சர்வ சங்கடம் நிவாரய நிவாரய

சௌபாக்யம் தேகிமே சுவாகா.


              மனை என்பது ஒரு குழந்தை போல எப்படி ஒரு குழந்தை பிறக்க 10 மாதம் காத்திருந்து பிறந்ததும் முதலில் தாய்ப்பாலை கொடுக்கிறோமோ, அப்படிதான் ஒரு வீட்டிற்கு புதுசாக போகும்போது அந்த வீட்டை ஒரு குழந்தையாக கருதி பால் காய்ச்சுவது நம் தமிழர் மரபு ஆகும்.


பசு அழைப்பு 

            புது வீட்டிற்கு பசு மாட்டினை அழைத்து வருவார்கள் ஏனென்றால் அந்த காலத்தில் பசுவை தெய்வமாக வணங்கி வந்தனர் எந்த ஒரு காரியம் செய்வதாக இருந்தாலும் பசுவை வணங்கி செய்வார்கள் யாகம் வளர்த்துவதால் வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் வெளியேறி நல்ல சக்திகளான தெய்வங்கள் உள்ளே வருவதற்காக செய்யப்படுவதாக கூறப்படுகின்றது .


      கிரகப்பிரவேசம் செய்யும் வீட்டில் பசுவை அழைத்து வந்து அந்த வீட்டில் கோமியம் விட்டாளோ, சாணம் இட்டாளோ அவர்களுக்கு இன்னமும் அதிர்ஷ்டம் என்றும் நம்பப்படுகிறது. தரையில் பசுஞ்சாணத்தை தெளித்து மெழுகி கோலம் போட்டு வந்தால் அந்தப் பசும் சாணம் தெளித்த இடத்தில் ஒரு பலமான செழிப்பு தெரியும். அதனால் தான் முக்கியமான சடங்கு மற்றும் சம்பிரதாயத்தில் இதை நாம் செய்கிறோம். 

     பசு என்பது விருத்தி அம்சத்திற்கு உரிய ஜீவராசி அது காலடி எடுத்து வைத்தால் விருத்தி வரும் என்று முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். பசு ஒரு வீட்டில் காலடி வைக்கிறது என்றால் ஒரு முழுமை பெறுகிறது. அங்கு ஒரு ஜீவ சக்தி உருவாகிறது அதனாலே தொன்றுதொட்டு நாம் பசுவை புதுமனைக்குள் கொண்டு வருகிறோம். 

பசுஞ்சாணம், பசுங்கோமியம் அத்தனையும் அறிவியலாளர்கள் பார்க்கும்போது கிருமிநாசினியாக செயல்படுகிறது என்று கூறுகின்றனர். 

யாகம் வளர்ப்பது 

     புதுமனை புகுவிழாவில் கணபதி யாகம், தொழில் தொடங்கும் போது லட்சுமி, சுதர்சன யாகம் என வழிபாடு நடந்தேறும். இதில் இடப்படும் நெய், வஸ்திரம், பழங்கள் அந்தந்த தெய்வங்களுக்கு அக்னிபகவான் மூலம் சென்றடைவதாக சாஸ்திரம் கூறுகிறது. இந்த ஆன்மிக காரணத்தோடு இதற்குள் அறிவியல் காரணமும் ஒளிந்திருக்கிறது. யாக குண்டத்தில் இருந்து வரும் புகை, காற்றில் பரவியுள்ள நச்சுக்கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது. யாகத்தீயில் இடும் நெய், பழங்கள், சமித்துகள்(சுள்ளிகள்) உண்டாக்கும் ரசாயன மாற்றத்தால் வாயு நாலாபுறமும் பரவும். இதை சுவாசித்தால் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, தலைவலி, குடல்புண் குணமாகும். நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி ரத்தத்தை சுத்தப்படுத்தும். இதயம் பலம் பெறும். யாகசாலை முடிந்ததும் அந்த இடத்தில் யோகசானம் பயில்பவர்கள் பலரும் ஒன்றுகூடி மூச்சுப்பயிற்சி, தியானம் செய்வது பழங்காலத்தில் வழக்கத்தில் இருந்தது. 

       

    ❇️⚛️⚛️⚛️✡️✡️✡️🕉️🕉️🕉️🔯🔯🔯❇️

Post a Comment

0 Comments