சிரிப்பு எனும் மருந்து
"வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்"என்று சொல்வார்கள். நோயை விரட்ட முகத்தில் சிரிப்பும் மனதில் தைரியமும் இருந்தால் போதும் முழுமையாக விரட்டிவிடலாம். சிரிப்பு என்னும் மந்திரம் நாம் ஒவ்வொரு முறை கடைபிடிக்கும் போதும் நமது ஆயுள் கூடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
சிரிப்பின் வகைகள்
- அசட்டு சிரிப்பு
- ஆணவ சிரிப்பு
- ஏளனச் சிரிப்பு
- சாககச் சிரிப்பு
- நையாண்டி சிரிப்பு
- புன்சிரிப்பு (மனத்தின் மகிழ்ச்சி)
- மழலை சிரிப்பு
- நகைச்சுவை சிரிப்பு
- அச்சிதல் சிரிப்பு
- தெய்வீகச் சிரிப்பு
- புருவச் சிரிப்பு
- காதல் சிரிப்பு
- வில்லங்க சிரிப்பு
- ஏழையின் சிரிப்பு
புன்னகை என்பது எந்தவிதமான ஓசையையும் செய்யாமல் உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சியை முகத்தில் காண்பிக்கும் ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடாகும். உலகம் முழுவதும் உள்ள மக்கள், புன்னகை என்பதனை, மனத்தில் உள்ள மகிழ்ச்சியை வெளிப்படத்தும் ஒரு சாதனமாகவே கருதுகிறார்கள். மனதில் உள்ள மகிழ்ச்சியானது புன்னகையின் வடிவில் தானாகவே வெளிவருகிறது. சில சமயம் புன்னகையானது கண்களிலும் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காணப்படுகிறது. புன்னகை வருவதற்கு முக்கிய காரணம் உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சியே எனலாம்.
விலங்குகள் பல்லைக்காட்டும் போது அது சிரிப்பதாக நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அதுவே மற்றவர்களை பயமுறுத்துவதற்காகவும், தாழ்படிந்து போவதற்கான அறிகுறியும் ஆகும். மேலும் அதுவே பயத்தின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
சமுதாய நன்மைகள்:
சிரிப்பு நம்மை மற்றவர்களுடன் இணைக்கிறது. பெரும்பாலான மக்கள் சிரிப்பு தொற்றுநோயாக இருப்பதைக் காண்கிறார்கள். எனவே, நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அதிக சிரிப்பைக் கொண்டுவந்தால், உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கு அதிகமாக சிரிக்கவும், இந்த நன்மைகளையும் உணரவும் நீங்கள் பெரும்பாலும் உதவலாம். உங்களைச் சுற்றியுள்ளவர்களின் மனநிலையை உயர்த்துவதன் மூலம், நீங்கள் அவர்களின் மன அழுத்த அளவைக் குறைக்கலாம் மற்றும் அவர்களுடன் நீங்கள் அனுபவிக்கும் சமூக தொடர்புகளின் தரத்தை மேம்படுத்தலாம், மேலும் உங்கள் மன அழுத்தத்தை இன்னும் குறைக்கலாம்!
சிரிக்கும்போது விஞ்ஞான அறிவியல் :
"என்டோர்பின்ஸ்' என்னும் திரவப்பொருள் நம் மூளையில் உருவாகி ஒருவகையான இயற்கைப் போதையை ஊட்டுகிறது.
இதனால் நம் உடலுக்குப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது.
ஆய்வு ஒன்றின் படி ஒரு நாளைக்கு சராசரி மனிதன் 15 தடவைகளும் குழந்தைகள் கிட்டத்தட்ட 400 தடவைகளும் சிரிக்கின்றன. இதிலிருந்து மனிதனுடைய வயதிற்கேற்றவாறு சிரிப்பு குறைந்து கொண்டு போவதை காண முடிகிறது.
உலக சிரிப்பு தினம்
ஆச்சரியமூட்டும் விடயம் என்னவென்றால் சிரிப்புக்கு என்று ஒரு தினம் இருப்பது தான் உலக சிரிப்பு தினம் ஆண்டுதோறும் மே மாதத்தில் முதலாவது ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. சிரிப்பின் வாயிலாக உலகில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பது இந்த தினத்தின் நோக்கம் ஆகும்.
சிரிப்பு பற்றி சினிமாப் பாடல்களிலும் கூறியுள்ளனர் அவை சிரித்து வாழ வேண்டும் என்ற பாடல்
"நகைச்சுவை உணர்வு எனக்கு இல்லாதிருந்தால் நான் நீண்ட நாட்களுக்கு முன்பே தற்கொலை செய்து கொண்டிருப்பேன் " -மகாத்மா காந்தி
மக்களை அதிகம் சிரிக்க வைத்தவர்களில் சார்லி சாப்ளின் மற்றும் மிஸ்டர் பீன் இவர்களைப் பார்த்து பலபேர் வியந்துள்ளனர் ஏனென்றால் அவர்களிடம் அவ்வளவு நகைச்சுவை மக்களை சிரிக்க வைக்கின்றது.
"உன் மனம் வலிக்கும் போது சிரி பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை" - சார்லி சாப்ளின்
சிரிப்பு நோய் எதிர்ப்பாற்றலை உயர்த்தும்; ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்; இதயத்தையும் நுரையீரலையும் நல்வழியில் தூண்டும், பிராண வாயு ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்; தசைகளைத் தளர்வாக்கும்; வலி நீக்கும்; உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். ஞாபக சக்தி, படைப்பாற்றல், துடிப்பாக இருத்தல், போன்ற மூளையின் செயல்திறனைக் கூர்மையாக்கும்.
நகைச்சுவை
"உங்க மனைவிய செல்லமா எப்படி கூப்பிடுவீங்ககூகுள்னு!!ஏன்??நான் எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சுடுவா" !!
"இந்த மருந்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்க!! பனியன் கூட போட்டிருக்க கூடாத டாக்டர்" ??
"அவர் பல் டாக்டர் இல்ல போலி டாக்டர்னு எப்படி சொல்ற?
பல் ஆடுதுன்னு இந்த டாக்டர் கிட்ட சொன்னதுக்கு,
பரதநாட்டியமா? குச்சுப்புடியான்னு கேக்கிறாரு".
" டாக்டர் : உங்களுக்கு இருக்கிற வியாதி குணமாகணும்னா மீன், கோழி சாப்பிடறதை நிறுத்தித்தான் ஆகணும்.!
நோயாளி : எப்படி டாக்டர் அதுங்க சாப்பிடறதை நான் நிறுத்த முடியும்"?
" அப்பா : டேய் அங்க என்னடா பண்ணிக்கிட்டு இருக்க?
மகன் : கடிகாரம் நின்னுப் போச்சுப்பா?
அப்பா : சாவி கொடுடா சரியாகிடும்.
மகன் :அதான்பா ரொம்ப நேரமா கொடுத்துக்கிட்டு இருக்கேன். அது வாங்கவே மாட்டேங்குதுப்பா..."!
மனிதர்களாகிய நமக்கு புன்னகை என்ற தனி சிறப்பு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால். இயந்திரங்களுடன் மனிதனையும் ஒப்பிட்டு ரசிக்கும் காலம் என்றோ வந்திருக்கும். இந்த புன்னகை என்ற தனி சிறப்பிற்கு உயிர் கொடுப்பவை நகைச்சுவை என்றே சொல்லலாம் .
Life is Very Short Nanba Always be Happy.......



0 Comments