அறிவியல் உண்மைகள்
அறிவியல் என்பது "அறிந்துகொள்ளுதல்" எனப் பொருள்படும் scientia எனும் இலத்தீன் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.
"கற்றது கை அளவு கல்லாதது உலகளவு" என்கிற பழமொழிக்கு ஏற்றபடி பள்ளிக்கூடத்து நாட்கள் தொடங்கி இந்த நொடி வரையிலாக, எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும்.
1. அழுகிய முட்டை நீரில் மேல் மிதக்கிறது. ஏனெனில் அழுகிய முட்டையில் உள்ள புரதம் நீரின் தன்மையைப் போல் மாறி நல்ல முட்டையின் எடையை விட லேசாகிறது. இதன் காரணமாக நீரில் மிதக்கிறது.
2. கம்பளியால் சுற்றிவைக்கப்பட்ட பனிக்கட்டி விரைவில் உருகுவதில்லை. ஏனெனில் ரோமத்தாலான கம்பளி வெப்பத்தை கடத்துவதில்லை.
3. ஆப்பிள் துண்டுகளை காற்றில் வைக்கும் போது, சிறிது நேரம் கழித்து பழுப்பு நிறமடைகிறது. காரணம் ஆப்பிள் கொண்டுள்ள இரும்பு காற்றில் இரும்பு ஆக்ஸைடாக மாற்றப்பட்டு பழுப்பு நிறத்தை அடைகிறது.
4. காய்ச்சலில் உள்ளவர்களுக்கு சில நேரங்களில் ஆல்கஹால் கொண்டு உடலில் பூசப்படுகிறது. ஏனெனில் உடலின் மேற்பரப்பிலுள்ள ஆல்கஹால் உடலின் வெப்பத்தினால் ஆவியாகி செல்லும் போது உடல் இழந்த வெப்பத்தால் குளுமையடைகிறது. ஆல்கஹால் பூசுவதால் உடல் வெப்பநிலை குறைகிறது ஆகும்.
ஆக்ஸிஜனுக்கு நிறம் உண்டு!
ஒரு வாயுவாக, ஆக்சிஜனுக்கு மனமும் கிடையாது, நிறமும் கிடையாது. ஆனால் அதன் திரவ மற்றும் திட வடிவங்களில், இது வெளிர் நீல நிறமாக இருக்கிறது.
ஆண்களை விட பெண்களால் அதிக நிறங்களை காண முடியும்!
வண்ணங்களை வகைப்படுத்தி காணும் திறன் ஆனது மரபணுக்கள் எக்ஸ் குரோமோசோமில் காணப்படுகின்றன. இவ்வகை எக்ஸ் குரோமோசோம்கள் ஆனது பெண்களுக்கு இரண்டும், ஆண்களுக்கு ஒன்றும் இருக்கிறது. ஆக பெண்களால் ஆண்களை விட அதிக அளவில் வண்ணங்களை பிரித்து பார்க்க முடியும்.
பாலூட்டி வகையில் ஒரே ஒரு ஜீவனுக்கு தான் இறக்கைகள் உள்ளன!
அது வெளவால்கள் ஆகும். மரத்திற்கு மரம் பறக்கும் அணில் வகைகளையும் இந்த பட்டியலின் கீழ் இணைக்கலாமே என்று நீங்கள் கோரிக்கை வைத்தால், மன்னிக்கவும், அவைகள் குதிக்கின்றன பறக்கவில்லை. ஆகவே வெளவால்கள் மட்டுமே இந்த போட்டியில் வெற்றி அடைகின்றன.
விண்வெளியில் உள்ள நட்சத்திரங்களை விட பூமியில் அதிக மரங்கள் உள்ளன!
நாசா வல்லுநர்களின்படி, நமது பால்வெளி மண்டலத்தில் 100 பில்லியன் முதல் 400 பில்லியன் நட்சத்திரங்கள் வரை எங்கும் இருக்க முடியும். 2015 ஆம் ஆண்டில் வெளியான நேச்சர் பத்திரிகை ஆய்வு அறிக்கையின் படி உலகெங்கிலும் உள்ள மரங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 3.04 டிரில்லியன் மரங்கள் உள்ளன.
விண்வெளியில் ஏப்பம் விட முடியாது!
நீங்கள் சாப்பிடுகிற உணவிலிருந்து திடப்பொருட்களையும், திரவத்தையும் ஈர்த்து விட்ட பிறகு, வாயு மட்டுமே வாயிலிருந்து தப்பித்துக் கொள்ளும், அதுதான் ஏப்பம் ஆகும், இது பூமியில் சாத்தியமாகும். ஆனால் புவியீர்ப்பு இல்லாத விண்வெளி பகுதிகளில், திரவங்கள் மற்றும் திடப்பொருட்களிலிருந்து வாயுவை பிரிக்க முடியாது, எனவே அது வாந்தியாக மாறிவிடும்.
ஆழ்கடலில் கூட ஆப்பிள் மூழ்காது
தண்ணீரில் ஆப்பிள்கள் மூழ்காததற்கு காரணம், ஆப்பிளில் 23% காற்று உள்ளதாம். அப்ப ஆப்பிள் மொபைல தண்ணீல போட்ட மிதக்குமா? விபரீத வேலை வேண்டாம்.
வாழைப்பழத்தில் கதிரியக்கம் உள்ளது!
நம்மிடம் மறைக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளில் ஒன்றாகும். வாழைப்பழங்களில் பொட்டாசியம் உள்ளது என்பதை அறிந்த நமக்கு, அதன் பொட்டாசியம் சிதைவு அடையும்போது அவைகள் சற்றே கதிரியக்கத்தை உருவாக்குகின்றன. என்பது தெரிந்து இருக்க வாய்ப்பே இல்லை. இதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. கதிர்வீச்சு விஷத்தை உட்கொள்ள ஒரே நேரத்தில் நீங்கள் 10,000,000 வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும்.
மரத்தின் கீழ் ஏன் தூங்கக் கூடாது?
பகல் நேரங்களில் மரத்தினடியில் படுத்துறங்குவதால் தவறில்லை. ஆனால், இரவு நேரங்களில் மரத்தடியில் படுப்பது பெரிதும் தீங்கானது. பகல் நேரத்தில் தாவரங்கள் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொண்டு பிராண வாயுவை வெளியிடுகின்றன. அதனால் மரத்தடியில் படுப்பவருக்கு பாதிப்பு ஏற்படாது. ஆனால், இரவில் மரங்களும் காற்றிலுள்ள பிராண வாயுவை உட்கொண்டு, கரியமில வாயுவை வெளியிடுகின்றன. மரத்தடியில் படுப்பவருக்கு, சுவாசிக்கத் தேவையான அளவுக்கு வேண்டிய பிராண வாயு கிடைக்காது. கரியமில வாயுவையே சுவாசிக்க நேரும். அதனால், இரவில் மரத்தடியில் படுப்பவரின் உடல்நலம் பாதிக்கப்படும்.
குட்டி போடும் ஆண் விலங்குகள்
இவ்வுலகில் பெண்தான் பத்து மாதம் கருவை வயிற்றில் சுமந்து குழந்தை பெறுகிறாள். ஆனால், கடல் குதிரை ஒரு வகையான மீன் இனமாகும். இவ்வினத்தில் ஆண் குதிரைதான் கருவை சுமந்து குழந்தை பெறுகிறது. இது இன விருத்திக்குத் தயாரானவுடன் பெண் ஆணுடைய வயிற்றுப் பையில் கருமுட்டையை இடுகிறது. ஆண் கருமுட்டை மீது விந்து பொழிந்து அதை வளர்க்கிறது. பின்பு குட்டிகளை ஈன்று கடலில் விடுகிறது. இதே போல் பைப்பிஷ் என்ற உயிரினங்களில் ஆண் தான் கருத்தரிக்கிறது. இதை ஆங்கிலத்தில் மேல் பெர்கினன்சி (Male Pregnansy) என கூறுகிறார்கள்.
அறிவியல் என்பது ஒவ்வொரு செயலிலும் உள்ள உண்மை தன்மையை எடுத்துக் கூற உதவுவதாகும் அதுமட்டுமில்லாமல் அறிவியல் மக்களோடு மக்களாக இணைந்துள்ளன அவற்றைப் பிரித்துப் பார்க்கும் போதுதான் அதில் உள்ள உண்மை தன்மை நமக்குத் தெரிய வருகிறது.




0 Comments