மூட நம்பிக்கையா? அறிவியலா?
சடங்குகள், பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளுக்குப் பின்னால் அறிவியல் சார்ந்த காரணங்கள் உள்ளது. கேட்க அர்த்தமற்றதாக இருக்கலாம். ஆனால் இதனை ஆழமாக பார்க்கையில், இந்த பழக்க வழக்கங்களுக்கான உண்மையான காரணம் புலப்படும்.
புரட்டாசியில் அசைவம் கூடாது
புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு விசேஷ மாதம் என்பதால் அசைவம் கூடாது என்று சொல்வார்கள். புரட்டாசி மாதத்தில் வெயிலும் இல்லாமல், மழையும் இல்லாமல் பருவ நிலை மாறும் காலம். இம்மாதத்தில் அசைவ உணவை சாப்பிட்டால், உடல் சூடேறி உடல்நலக்குறைவு ஏற்படும் என்பதால் அசைவம் தவிர்க்க இப்படியான கதை உருவாக்கப்பட்டது.
எலுமிச்சை மிளகாய் திருஷ்டி கயிறு
எலுமிச்சை மிளகாய் திருஷ்டி கயிறு என்பது தீய கண்களில் இருந்து உங்களை பாதுகாக்கும் என நம்பப்படுகிறது. இதற்கு காரணமாக வீட்டினுள் கெட்ட சக்தி நுழையாமல் தடுக்கும் என்று காரணத்தைச் சொல்வார்கள். இதன் உண்மையான காரணம் இதுவல்ல காட்டன் நூலானது எலுமிச்சை மற்றும் பச்சை மிளகாயில் உள்ள வாசனையை உறிஞ்சி வீட்டினுள் கொசு பூச்சி அண்டாமல் தடுக்கும்.
தாயத்து கட்டுதல்
தாயத்து கட்டுவதால் காத்து, கருப்பு அண்டாது என்றும் கூறுவர் அதுமட்டுமல்லாது குழந்தைகள் பயந்து விட்டன என்றும் கட்டுவார்கள். இதில் உள்ள அறிவியல் உண்மை என்ன. குழந்தை பிறந்தவுடன் அதன் தொப்புள்கொடியை காயவைத்து பொடியாக்கி தாயத்தில் அடக்கி குழந்தைக்கு கட்டிவிடுவார்கள் பிற்காலத்தில் குழந்தைக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால் அந்த தாயத்தில் உள்ள பொடியை பாலிலோ, நீரிலோ கலந்து கொடுக்க சொல்வார்கள் எந்த விதமான நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது இந்த பொடிக்கு ஸ்டம் செல் ரிசர்ச் என்ற பெயரில் மேற்கத்திய நாடுகளில் மேற்கொண்டுவரும் ஆய்வுகளை நம் முன்னோர்கள் ஏற்கனவே அறிந்து வைத்துள்ளனர்.
இரவு நேரத்தில் அரச மரம் அருகில் போகாதீர்கள்
இரவு நேரத்தில் அரச மரத்தில் பேய் குடி கொண்டிருக்கும் என்பதெல்லாம் பொய். அந்த நேரத்தில் தான் மரத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடு வெளிவரும். இது மனிதர்களுக்கு நல்லதல்ல. அதனால் இரவு நேரத்தில் அரச மரம் அருகில் போக வேண்டாம் என்று கூறுவார்கள்.
கோயில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்வதன் காரணம்
அந்த காலத்தில் எந்த ஊருக்கும் இடி தாங்கிகள் என்று எதுவும் தனியாக கிடையாது. கோயில் கோபுரங்கள் தான் அந்த ஊரிலேயே உயரமாக இருக்கும். அதன் கலசங்களின் நிரப்பபட்டுள்ள நவ தானியங்கள் , இடியை உள்வாங்கி கொள்கின்றன. அதனால் ஊரில் அவ்வளவாக இடிகள் தாக்குவதில்லை. ஆனால் அந்த கலசத்தில் உள்ள நவதாநியங்களின் சக்தியும் 12 ஆண்டுகள் வரை தான். அதனால் தான் கும்பாபிஷேகம் என்று வைத்து அந்த கலசங்களில் உள்ள நவதானியங்களை மீண்டும் புதிதாக நிரப்புகிறார்கள்.
தயிரும் சர்க்கரையும்
வெளியே செல்வதற்கு முன் தயிர் குடிப்பது வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியுடன் வைத்திருக்கும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் வெயில் காலத்தில் வெளியே செல்பவர்கள் தயிரில் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தார்கள் அது உடனடி குளுக்கோஸாக செயல்பட்டது இந்த பழக்கம் அப்படியே அதிஷ்டதுடன் தொடர்புபடுத்தி இன்றும் பின்பற்றப்படுகிறது.
ஆரத்தி எடுத்தல் எதற்கு
ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும் மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம். ஒவ்வொரு மனிதனை சுற்றிலும் ஆரா என்ற சூட்சம பகுதி இருக்கிறது.
ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேணுவதோடு பிறருக்கும் அந்த விஷக்கிருமிகள் பரவாது தடுக்கிறது. வீட்டினுள் நுழையும் முன்பே ஆரா சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது.
தும்மல் அபசகுனம்
சுபகாரியங்கள் செய்யும்போதோ அல்லது வெளியில் செல்லும் போது தும்மல் வந்தால் அது கெட்ட சகுனம் என்று சொல்லப்படுவதுண்டு இதற்குக் காரணம் தும்மல் ஒரு சாதாரண இயற்கை செயல் ஒருவர் தும்மினால் அவருக்கு உடம்பு சுகமில்லை எனக்கருதி கசாயம் தருவது பண்டைய வழக்கம். வெளியே போகும் போது தும்மினால் உடம்பு சுகமில்லை போக வேண்டாம் என்று ஒரு சொம்பு வெண்ணீர் கொடுத்து அனுப்புவதையும் வழக்கமாக வைத்திருந்தனர் அதைத்தான் நாம் அபசகுணம் என்று மாற்றி உள்ளோம்.
நெற்றியில் குங்குமம்
நெற்றியில் இரண்டு புருவங்கள் இடையே பண்டைய காலத்தில் இருந்து மனித உடலில் ஒரு முக்கிய நரம்பு புள்ளியாக கருதப்படும் ஒரு இடமாக உள்ளது. ஆற்றல் இழப்பை தடுத்து புருவங்களுக்கு இடையே சிவப்பு குங்குமம் மனித உடலில் சக்தியை தக்க வைத்து செறிவூட்டல் இன் பல்வேறு அளவுகளை கட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது குங்குமம் பயன்படுத்துகையில் நடுப்பகுதியில் வளைந்த பகுதியில் மற்றும் அட்மின் சக்கரா புள்ளிகள் தானாக அழுத்தும் இது முகத்தில் உள்ள தசை செல்களுக்கு ரத்தம் அளிப்பதற்கும் உதவுகிறது.
மெட்டி அனிவது
கால் வளையம் அணிந்து கொள்வது திருமணமான பெண்களின் முக்கியத்துவத்தை மட்டுமல்ல அதன் பின்னால் அறிவியல் உள்ளது. பொதுவாக கால்விரல் வளையங்கள் இரண்டாவது விரலில் அணிந்து கொள்கின்றன. இரண்டாவது விரல் இருந்து ஒரு குறிப்பிட்ட நரம்பு இணைக்கும் மற்றும் இதயம் கடந்து இந்த விரலில் கருப்பை வளர்கிறது. இது ரத்த ஓட்டத்தை ஒழுங்கு படுத்துவதன் மூலமும் மாதவிடாய் சுழற்சியானது சீரமைக்கப்படும். சில்வர் ஒரு நல்ல கடத்துனராக இருப்பதால் அது பூமியிலிருந்து துருவ உணவை உறிஞ்சி உடலுக்கு செல்கிறது இதனால் நன்மையே உண்டாகும்.





0 Comments