மாம்பழம் உண்மை என்ன?
முக்கனிகளில் முதல்கனியான நமது மாங்கனியின் ஒருவகைப் பழம், ஒரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாட்டில் கலைநயத்துடன் வளர்க்கப்பட்டு அவர்களுக்குப் புகழைச் சேர்த்திருக்கிறது. மற்றொரு நாட்டின் பொருளாதாரத்தையே மாற்றியமைத்திருக்கிறது. அதேபோல, நமக்கும் நன்மையையே பயக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது இந்த ஞானப்பழம்!
மாம்பழ வகையினங்கள் அல்லது இரகங்கள்
- செந்தூரா மாம்பழம்
- கறுத்த கொழும்பான்
- வெள்ளைக் கொழும்பான்
- பங்கனப்பள்ளி மாம்பழம்
- மல்கோவா மாம்பழம்
- ருமானி மாம்பழம்
- திருகுணி
- விலாட்டு
- அம்பலவி
- செம்பாட்டான்
- சேலம்
- பாண்டி
- பாதிரி
- களைகட்டி
- பச்சதின்னி
- கொடி மா
- மத்தள காய்ச்சி
- நடுசாலை
- சிந்து
- தேமா (இனிப்பு மிக்கது)
- புளிமா (புளிப்பு மிக்கது)
- கெத்தமார்
- சீமெண்ணெய் புட்டிக்கா
- காலபாடி ஆகிய பல வகைகள் உள்ளன.
மாம்பழத்தின் சுவை மனச்சோர்வை நீக்கும், ஆண்மையை அதிகரிக்கும் மற்றும் உடல் வன்மை அதிகரிக்கும் தன்மை கொண்டது. மாம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடென்ட் அதிகமாக இருப்பதால், புற்று நோய் மற்றும் வயது மூப்பு போன்றவற்றிற்கு காரணமாக இருக்கும் உயிரணுக்கள் சேதமடையாமல் பாதுகாத்து, அவற்றை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. ரத்தம் நமது உடலில் புதிதாக உற்பத்தியாகிக் கொண்டே இருந்தால் தான், உடல் வளர்ச்சியடையும், ஆரோக்கியமாகவும் விளங்க முடியும். அத்தகைய ரத்த உற்பத்திக்கு மாம்பழங்கள் பெரிதும் உதவுகின்றன.
சத்துக்கள்
மாம்பழச்சதையில் 15% சர்க்கரை, 1% புரதம், பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன. பெரும்பாலான மாம்பழ வகைகள் இனிப்பாக இருப்பினும், சில சற்றே புளிப்பாக இருக்கும்.
ஆரோக்கியமான இதயம்
மாம்பழமானாலும் சரி, மாங்காயாக இருந்தாலும், இதனை சாப்பிட்டால் இதயமானது ஆரோக்கியமாக இருக்கும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் பச்சை மாங்காயை நறுக்கி, நீரில் ஊற வைத்து, பின் அந்த நீரைப் பருகி வந்தால், இதய நோய், மாரடைப்பு போன்றவை வராமல் தடுக்கலாம்.
நோய் எதிர்ப்பு
மாம்பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. அதிலும் பச்சை மாங்காய் சளி மற்றும் இருமலுக்கு பெரிதும் சிறப்பான தீர்வைத் தரும்.
முகப்பரு நீங்கும்
மாம்பழமானது சருமத்திற்கு மிகவும் சிறந்தது. அதிலும் இவை பருக்களை மட்டுமின்றி, கரும்புள்ளிகளை நீக்குவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் கோடையில் மாம்பழ ஃபேஷியல் மிகவும் பிரபலமானது. ஏனெனில் அவை உடலில உள்ள வெப்பத்தை வெளியேற்றி, சருமத்தை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.
கண்கள் தெளிவாக
மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. தெளிவாக மற்றும் ஆரோக்கியமான கண் பார்வைக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியம். இத்தகைய சத்து மாம்பழத்தில் இருப்பதால், இதனை அதிகம் சாப்பிட்டால், தெளிவாக கண் பார்வையைப் பெறலாம்.
ஜப்பானை சேர்ந்த மியசாகி (Miyazaki) என்ற வகையைச் சேர்ந்த இந்த மாம்பழம் உலகிலேயே மிக விலையுயர்ந்தது. சர்வதேச சந்தையில் கடந்த வருடம் இந்த வகை மாம்பழமானது கிலோவுக்கு ரூ.2.70 லட்சம் விலை போனதாம். இந்த வகை மாம்பழங்கள் இந்தியாவில் அரிதாகவே வளர்க்கப்படுகிறது.
மியாசாகி மாம்பழம் பார்வை குறைபாடுகளை போக்குவதில் சிறந்த பங்குவகிக்கிறது. அவற்றில் பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம் மற்றும் ஆன்டிஆக்ஸிஜனேற்றங்கள் அதிகளவில் உள்ளன.
இந்த அரிய வகை சிவப்பு ரக மாம்பழங்கள் ஜப்பானிய நகரமான மியாசாகியில்தான் முதன்முதலில் பயிரிடப்பட்டது. அதனால் இந்த அரிய வகை மாம்பழம் மியாசாகி மாம்பழம் என்றும் இந்த மாம்பழத்திற்கு `Taiyo-no-Tomago’ என்று பெயர் வைத்துள்ளனர். இதற்கு சூரியனின் முட்டை என்று பொருள். இந்த மாம்பழம் மஞ்சள் நிறத்திலோ அல்லது பச்சை நிறத்திலோ இல்லை. பழுக்கும்போது ஊதா நிறத்தில் இருந்து சிவப்பு நிறமாக மாறும். இதனுடைய வடிவம் டைனோசரின் முட்டைப் போன்று இருக்கும். தகவல்களின்படி, இந்த மாம்பழங்கள் சுமார் 350 கிராம் எடை உடையவை. மற்ற மாம்பழங்களைவிட அதிகமான இனிப்பு சுவை உடையவை என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் சில சத்துக்களை பிரத்யேகமாக கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அழைக்கப்படுகிறது.
உண்மையில் இந்த மியசாகி மாம்பழங்களின் பிறப்பிடம் ஜப்பான் அல்ல, அமெரிக்கா
1939-ம் ஆண்டு, அமெரிக்க நாட்டின் ஃப்ளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த எஃப்.டி. இர்வின் என்ற இயற்கை விஞ்ஞானி ஒரு சுவையான மாம்பழத்தை உருவாக்க முயற்சித்தபோது வந்த ஒரு கலப்பின மாம்பழம்தான் இந்த மியசாகி மாம்பழம். அதன் பிரத்தியேக நிறம், சுவை மற்றும் மணம் காரணமாக அப்போது அது அமெரிக்காவில் பெரும் வரவேற்பைப் பெற, அதனை தென் கொரியா, தைவான், ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு 1960களில் அறிமுகப்படுத்தியிருக்கிறது அமெரிக்கா. அப்படி உலகமெங்கும் ‘இர்வின் மாம்பழம்’ என்ற பெயருடன் பரவிய இந்த மாம்பழம் பிற்பாடு மியசாகி மாம்பழம் என்ற பெயர் பெறக் காரணம் ஜப்பானியர்களின் விவசாய முறைதான் என்கிறது வேளாண் அறிவியல்.
எது எப்படியோ விவசாயத்தின் பெருமையை எடுத்துக் கூறுகிறது இந்த மாம்பழம்.



0 Comments