Ticker

6/recent/ticker-posts

Food Decide morning and night

 "காலையில் ராஜாவைப் போல் சாப்பிடு"♔

            பெரும்பாலான மக்கள்  இரவு நேரத்தில் கொழுப்பு சத்து அதிகமுள்ள வறுத்த, பொரித்த உணவுகளை அதிக அளவில் சாப்பிட்டு விடுகிறோம். இதனால் உடல் எடை அதிகரிப்பதற்கும் நோய்கள் உள்ளே வருவதற்கும் இந்த உணவுமுறை தான் முக்கிய காரணமாக அமைகிறது. 

           தமிழர்கள் மத்தியில் உண்ணும் உணவு முறையில் ஒரு நம்பிக்கை பழங்காலமாகப் பின்பற்றப்படுகிறது. அதாவது கிழக்கு நோக்கிச் சாப்பிட்டால் ஆயுள் வளரும். தெற்கு நோக்கி சாப்பிட்டால் புகழ் பெருகும், மேற்கு நோக்கிச் சாப்பிட்டால் செல்வம் வளரும், வடக்கு நோக்கிச் சாப்பிடக்கூடாது. என்பதே அந்த நம்பிக்கையாகும்.
 

 உணவு பரிமாறுதல்

      முன்பு எல்லோர் வீட்டிலும் வாழை மரங்கள் இருந்தன. அவ்வாறு வாழையிலை உணவு உண்ண பயன்படுத்த துவங்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த வாழையிலையில் சூடான உணவு போட்டு சாப்பிடுகையில், குளோரோஃபில் (Chlorophyll) உணவுடன் கலந்து, உடலுக்கு ஊட்டச்சத்தை தருகிறது.


>" காலையில் ராஜாவைப் போல் சாப்பிடு" 
> "மதியம் சேவகனை போல் சாப்பிடு" 
> "இரவில் பிச்சைக்காரனை போல் சாப்பிடு" என்று ஒரு பழமொழி உள்ளது. 

        காலையில் எல்லா சத்துக்களும் நிறைந்த பழங்கள் காய்கறிகள்  கலந்த உணவை சாப்பிட வேண்டும். மதியம் நிறைய காய்கறிகள் கொஞ்சம் சோறு சாப்பிட வேண்டும். இரவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவை மிகக் குறைந்த அளவில் சாப்பிட வேண்டும் என்பதே இதன் அர்த்தம். 

      ஆனால் நாம் என்ன செய்கிறோம். காலையில் சரியாக சாப்பிடுவதில்லை. இரவில் கொழுப்புச் சத்து நிரம்பிய  உணவுகளை அதிக அளவில் உண்கிறோம். பிரியாணி, பிரைட் ரைஸ், பரோட்டா போன்றவைகள் தான் பெரும்பாலான மக்களின் இரவு உணவாக அமைகிறது. இதனால் உடல் எடை அதிகரிப்பதற்கும் நோய்கள் வருவதற்கும் முக்கிய காரணம் இந்த உணவு முறை தான். 

  எனவே ஆரோக்கியமான உணவை இரவில் எடுத்துக்கொள்வதன் மூலம் பல்வேறு நோய்களிலிருந்து நம்மை நாம் பாதுகாக்கலாம்.

பண்டைய தமிழர்களின் உணவு முறைகள்

பண்டைய தமிழர்கள், அவர்கள் வாழ்ந்த நிலத்திற்கு ஏற்ப உணவு முறைகள் அமைந்துள்ளன.

குறிஞ்சி: கிழங்கு வகைகள், மலையில் விளையும் காய்கறிகள், சில இறைச்சி வகைகள், வரகு, சாமை, திணை, கேழ்வரகு போன்றவையும் உண்டுள்ளனர்.

முல்லை: காட்டு விலங்கின் இறைச்சிகள், காட்டுக் காய்கறிகள், சில நெல் வகைகள், மாம்பழம், வாழைப்பழம் போன்றவை உண்டு வந்துள்ளனர்.

மருதம்: நெல் வகைகள், மரக்கறி வகைகள், ஊறுகாய், பயறு வகைகள் போன்றவை உண்டு வந்துள்ளனர்.

நெய்தல்: நெய்தல் நிலத்தில் வாழ்ந்த மக்கள், நண்டுக் கறி, மீன் வகைகள் போன்றவை உண்டு வந்துள்ளனர்.

என்ன சாப்பிடலாம்? 🍲😋


                   இரவு நேரத்தில்  உப்புமா, சுக்கா ரொட்டி, கோதுமை சப்பாத்தி, இட்லி இடியாப்பம், தோசை என வயிற்றுக்கு கேடு விளைவிக்காத மிதமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம். அது கூடவே பருப்பு சாம்பார், கொத்தமல்லி, தேங்காய், புதினாவில் செய்த சட்னி இவைகளை சாப்பிடும்போது நல்ல ஜீரண சக்தி கிடைக்கும்.


 என்ன சாப்பிடக்கூடாது? 🐔

            இரவு நேரத்தில் நூடுல்ஸ், பரோட்டா அசைவ உணவுகள் வறுத்த, பொரித்த உணவுகள் மசாலா உணவுகள், ஜங்க் ஃபுட், கூல் ட்ரிங்ஸ் இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும்.  மசாலா உணவுகள் அசிடிட்டியை ஏற்படுத்தும். அசைவம், பரோட்டா உணவுகள் மலச்சிக்கலை ஏற்படுத்தும் அதனால் இவைகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.


உணவு உண்ணும் முறை

                    தரையில் சம்மணம் போட்டு வரிசையாக அமர்ந்து உண்ணுவதை தமிழர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். குடும்பத்தில் முதலில் பெரியவர்கள், வயதானவர்கள், குழந்தைகளுக்கும் உணவு பரிமாறி விட்டு அடுத்து இளைய தலைமுறை சிறுவர்களுக்கு உணவு பரிமாறிவிட்டு, கடைசியாக வீட்டு பெண்கள் உணவு உண்கின்றனர்.

சாப்பிட உடனே தூங்க கூடாது 


      சாப்பிட்ட உடனே தூங்குவதால் அந்த உணவு வயிற்றில் வழக்கமாக தங்கியிருக்கும் நேரத்தைவிட கூடுதலான நேரம் தங்கியிருக்கும். இப்படி அதிக நேரம் தங்கியிருப்பதால் அதை செரிக்கச் செய்வதற்கான அமிலங்கள் அதிக அளவில் சுரக்க ஆரம்பிக்கும். இப்படி படுத்திருக்கும் பொழுது சுரக்கும் அதிக அளவிலான அமிலங்கள், வயிற்றோடு நிற்காமல் மேலே உணவுப் பாதைக்கும் போகிறது. இதனால் செரிமானக் கோளாறு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகள் உண்டாகிறது.

       நம் உடலை நாம் சரியாக கவனித்துக் கொண்டால் எந்த நோயும் நம்மை நெருங்காது. முதலில் நம் உடல் நலத்தை பேணிக் காப்பது மிகவும் அவசியம். அதற்கு அப்புறம் தான் எல்லா வேலைகளும். 

Post a Comment

0 Comments