கருப்பு நிற உணவுகள்
நாம் உண்ணக்கூடிய உணவுகளை நமது உடல் ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றன அப்படியான உடலுக்கு பயன்தரும் கருப்பு நிற உணவுகளை காண்போம்.
உணவே மருந்து என்று வாழ்ந்துவரும் ஒரு சமூகமாக தமிழ் சமூகம் உள்ளது. கருப்பு நிற உணவுகள் எனப்படும் சில சத்தான உணவுகள் உள்ளன பலர் அதை அதிகமாக சாப்பிடுவதே இல்லை இந்த உணவுகள் நமது பகுதியில் அதிகம் கிடைப்பதில்லை என்று ஒரு காரணம் உள்ளது
இந்த உணவுகள் நீரிழிவு புற்றுநோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களுக்கு எதிராக போராட உதவுகின்றன.
கருப்பு பூண்டு
பொதுவாக பூண்டு ஒரு மருத்துவ குணம் கொண்ட உணவாகும் அதனாலேயே பூண்டை தங்களது உணவுகளில் அதிகம் சேர்க்கின்றனர் அதேபோல பூண்டில் கருப்பு பூண்டு வெள்ளை பூண்டு என உள்ளது இந்த கருப்பு பூண்டு வெள்ளை பூண்டு போலவே பற்கள் கொண்டுள்ளன.
இவை வீக்கத்தை தடுக்கவும் நமது நினைவு திறனை அதிகரிக்கவும் மற்றும் நமது குறுகியகால நினைவுத்திறனை மேம்படுத்துகிறது. ஆக்சிஜன் அதிகரிக்கவும் புற்றுநோய் எதிர்ப்பு போன்ற பண்புகள் காரணமாக நாம் பயன்படுத்தும் பூண்டை காட்டிலும் கருப்பு பூண்டு சிறந்தது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கருப்பு அத்திப்பழம்
கருப்பு அத்தி பழம் அமெரிக்காவில் அதிகமாக விளைகின்றன இவை இனிப்பு சுவை கொண்ட சுவையான பழங்கள் ஆகும் இவை அதிக அளவில் பொட்டாசியத்தையும் நார்ச்சத்தையும் கொண்டுள்ளன இதனால் இவை செரிமானத்திற்கு உதவுகின்றன இந்தப் பலன்கள் எடை இழப்பிற்கு அதிகம் உதவுவதாக கூறப்படுகிறது.
கருப்பு அத்திப்பழங்கள் நம் உடலில் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவுகிறது அதுமட்டுமல்லாமல் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உயர் ரத்த அழுத்தத்தை சமாளிக்கவும் உதவுகிறது.
கரு நாவல் பழங்கள்
கரு நாவல் பழம் இதை பிளாக்பெர்ரி பழம் என்றும் அழைப்பர் இவை வீக்கத்தை குறைத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன இந்தப் பழங்கள் மாதவிடாயில் ஒழுங்கற்ற தன்மையை கையாளும் பிரச்சனைகளை கொண்ட பெண்களுக்கு பரிந்துரைக்க வேண்டும் ஆக்சிஜனேற்றம் அதிகம் கொண்ட உணவுகளில் கருநாவல் பழங்களும் அடங்கும்.
கருப்பு அரிசி
அரிசியில் ஒரு தனித்துவமான அரிசியாக கருப்பு அரிசி உள்ளது சீன மக்கள் இந்த அரிசியை பாரம்பரியமாக பல காலங்களாக பயன்படுத்தி வருகின்றனர் இவை நமது கண்பார்வையை மேம்படுத்தவும் விழித்திரையை கடுமையான ஒளியிலிருந்து பாதுகாக்கவும் பயன்படுகிறது.
கருப்பு எள்
கருப்பு எல் ஆசிய மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படும் உணவாக உள்ளது இது கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற மேக்ரோ தாதுக்களை அதிகமாக கொண்டுள்ளன அவை இருதய ஆரோக்கியத்திற்கும் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகின்றன.
இந்த விதைகளில் உள்ள இரும்பு தாமிரம் மற்றும் மாங்கனீசு ஆகியவை உடலில் ஆக்ஸிஜனின் சுழற்சியை ஒழுங்குபடுத்துகிறது வளர்சிதை மாற்றத்தின் விகிதங்களை யும் கட்டுக்குள் வைத்திருக்கின்றன.
கருப்பு திராட்சைப் பழங்கள்
திராட்சையில் உள்ள அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய்க்கு எதிராக போராடி நமது உடல் நலனை பாதுகாக்கின்றன
இந்த கருப்பு திராட்சை சாப்பிடுவதால் மார்பக புற்றுநோய் அபாயம் குறையும், செரிமானம் மேம்படும், சிறுநீரக கோளாறு குணமாகும், ஒற்றைத் தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும், ஆரோக்கியத்திற்கு நல்லது சர்க்கரை நோயை குணப்படுத்தும், ரத்த கொலஸ்ட்ரால் அளவை சீராக்கும், முதுமை தோற்றத்தை தடுக்கும், தலைமுடி உதிர்வை தடுக்கும், பொடுகு தொல்லை நீங்கும், போன்ற பல்வேறு நன்மைகளை இந்த கருப்பு திராட்சையில் அடங்கியுள்ளன.
கருப்பு காளான்
கருப்பு காளான் அல்லது கருப்பு பூஞ்சை என்று அழைக்கப்படும் இது, அதிகமாக உணவுகளில் சேர்த்துக்கொள்வதால். அவை நரம்பியக்கடத்தல் நோய்கள், செரிமான பிரச்சினைகள், பாக்டீரியா வளர்ச்சி, அதிக கொழுப்பு மற்றும் கல்லீரல் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. கருப்பு காளான்கள் பல ஆண்டுகளாக பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.
அதிமதுரம்
அதிமதுரம் என்பது ஒரு தாவரத்தின் பெயர் ஆகும். இதன் கருப்பு வேர்கள் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்வேர்களில் இயற்கையிலேயே உள்ள இனிப்பு சுவை காரணமாக, இது உணவுத் தயரிப்புகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் வேர்கள் வேதியியல் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் உயிரணு பாதுகாப்பு போன்றவற்றிக்கும், மேலும் பல மருத்துவ சிகிச்சைகளிலும் பயன்படுத்தபட்டு வருகின்றன.
கருப்பு பீன்ஸ்
கருப்பு பீன்ஸ் அதிக அளவு செரிமானமாகாத கார்போ ஹைட்ரெட்களை கொண்டுள்ளது. அவற்றில் குறைந்த சீரம் கொழுப்பு, குறைந்த கிளைசெமிக் பண்பு மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்றவற்றின் பாதிப்பை தடுக்க உதவுகிறது. இதில் அதிகளவு நார்ச்சத்து நிரம்பியுள்ளதால், இவை வளர்சிதை மாற்ற நோய்களின் அபாயத்தைத் தடுக்க உதவுகிறது. மேலும் பல்வேறு நோய்களுக்கு எதிராக செயலாற்றும் ஆற்றலை கொண்டுள்ளது.
"கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு" என்ற சினிமா பாடல் கருப்பின் சிறப்பை கூறுவதுபோல கருப்பு நிற உணவுகள், காய்கறிகள், பழங்கள், போன்றவையும் நம் உடல் நலத்துக்கு கருப்பின் மகத்துவம் அறிந்து கருப்பு என்றால் வெறுப்பு ஆகாமல் கருப்பில் உள்ளே ஒரு வெண்மை ஒளிந்திருப்பது போல அதில் பல்வேறு சத்துக்களும் நமக்கு நன்மைகள் தரக்கூடிய உணவு வகைகள் ஆகும்.
சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வோம் உடல் ஆரோக்கியத்தைப் பேணி பாதுகாப்போம்.
🙏🙏🙏






0 Comments