Ticker

6/recent/ticker-posts

Ayurvedic medicine health is important tamil

  நோய் தீர்க்கும் மூலிகை


 "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" நோயில்லாமல் வாழ்வதே மிகப் பெரிய செல்வம் என்று கூறலாம். 

 நம் முன்னோர்கள் நமக்கு மிகப்பெரிய செல்வத்தை விட்டுச் சென்றுள்ளனர்  அதுதான் மூலிகை.


       மூலிகைகள் இயற்கை நமக்கு அளித்துள்ள வரப்பிரசாதமாகும். சாதாரண நோய்கள் முதல் கொடிய நோய்கள் வரை மூலிகைகளால் எளிய முறையில் குணப்படுத்தி விடலாம். இதற்காக ஒவ்வொரு நோய்க்கும் ஒரு சில மூலிகைகள் மிக சிறந்த பலனைத்தருகின்றன. இவை மனிதனுக்கு வரும் நோய்களுக்கு மட்டுமின்றி விலங்கினங்களுக்கு வரும் நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. இவற்றை உணவில் ஒருவகை எனக்கருதி வாழ்நாள் முழுவதும் உட்கொள்ளலாம். தவறில்லை. இதனால் பின்விளைவுகள், பக்க விளைவுகள் ஏதுமில்லை. இம்மூலிகைகள் நோய்களை குணப்படுத்துவதற்கு மட்டுமின்றி, வராமல் தடுக்கும் ஆற்றலும் பெற்றன என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

    சக்திக்குரிய வேப்பிலை, சிவனுக்குரிய வில்வம், திருமாலுக்குரிய துளசி, பிரம்மாவுக்குரிய அத்தி மற்றும் தும்பையிலை, ஆடுதொடா, தூதுவெளை, முருங்கையிலை ஆகிய மூலிகை ஆகும்.

  •     கொத்தமல்லி - காய்ச்சல் வாந்தி இருமல் இளைப்பு
  •  சீரகம் - வயிறு உப்பசம் காய்ச்சல் வாந்தி
  •    தும்பை - நீர்சுருக்கு சிறுநீரக கல் நாவரட்சி  ரத்தக்கட்டு கபம் அஜீரணம் வீக்கம்
  •  நன்னாரி - ஜீரண குறைவு சுவையின்மை இருமல் காய்ச்சல்
  •      திப்பிலி - இருமல் அஜீரணம் சுவையின்மை இதய நோய் ரத்த சோகை
  •    நாயுருவி - கபம் கொழுப்பு இதய நோய் உப்புசம் மூலம் வயிற்றுவலி

    துளசி - துழாய் என்பதே இதன் தமிழ்ச்சொல் துளசி இலைகளை நீரில் போட்டு நீர் ஆவி பிடிப்பதால் மூக்கடைப்பு, நீர்கோவை, தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் குணமாகும். துளசி இலை பொடி அதிமதுரம் தூதுவளை பொடி இவைகளைக் கலந்து உண்ணுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

 மணத்தக்காளி - மலச்சிக்கல், பசி மந்தம், சளி, தீராத இருமல், குளிரால் சரியாக   வியர்க்காமல் இருப்பது. நுரையீரல் சளியை குணப்படுத்தும்.

  •    தேங்காய் - நீர்க்கோவை யை நீக்குவது. 
  •    கறிவேப்பிலை - மணமூட்டி உணவு விருப்பத்தை உண்டாக்குவது. 
  •    நல்லெண்ணெய் - கண் குளிர்ச்சியும் அறிவுத் தெளிவும் உண்டாக்குவது.

  •     உடல் சூட்டை தனித்து செரிமான ஆற்றலை அதிகரிக்கச் செய்வது சீரகம் பூண்டு கலந்த மிளகு நீர்.
  •   எலுமிச்சை - குளிர்ச்சி தந்து பித்தம் போக்குவது. 
  •      குப்பைமேனி - மழ புழுக்களை வெளியேற்றும், வயிறு தூய்மையாகவும் பசியை தூண்டவும் நச்சுக்கடிகளுக்கும் நல்ல மருந்தாகும்.
  •      அகத்திக்கீரை - பல் சார்ந்த நோய்களை குணமாக்க பயன்படுவது.

       கீழ்கண்ட மூலிகைகளை வீட்டுத் தோட்டங்களில் மிக எளிமையான முறையில் மூலிகை தோட்டங்களாக அமைத்து பயன்பெறலாம். 

  • அவுரி
  • அமுக்கரா
  • அதிமதுரம்
  • ஆடாதொடை
  • ஆடுதீண்டாப்பாளை
  • ஆவாரை
  • ஈசுவரமூலி
  • சிற்றரத்தை
  • கரிசாலை
  • கீழாநெல்லி
  • சோற்றுக் கற்றாழை
  • தண்ணீர் விட்டான் கிழங்கு
  • சிறு குறிஞ்சான்
  • செம்பருத்தி
  • துளசி
  • நிலவேம்பு
  • பொடுதலை
  • முடக்கறுத்தான்
  • வசம்பு
  • வல்லாரை
  • நொச்சி
  • தழுதாழை
  • இஞ்சி
  • திருநீற்றுப் பச்சிலை
  • கற்பூரவல்லி
  • நன்னாரி
  • கொடிவேலி
  • சிறுகண்பீளை
  • பிரமி
  • அனைத்து கீரை வகைகள்

       " அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்ற அவ்வையின் வாக்குப்படி நமக்கு கிடைத்த இவ்வுடலை நோயின்றி வைத்திருப்பது நம் கடமையாகும். 

Post a Comment

0 Comments