Ticker

6/recent/ticker-posts

TAMILAN SATHANAIKAL - “தமிழன் என்ன கண்டுபிடிச்சான்?”

“தமிழனின்  வியக்க வைக்கும் சாதனைகள் ?”


     நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும். பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு, வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு. தமிழரின் சாதனைகள் அளப்பரியது அந்தக் காலத்தில் சிலைகள் செல்லு செதுக்குவது முதல் பல்வேறு செயல்களில் தங்களின் திறமைகளை உலகிற்கு வெளிக்காட்டி உள்ளனர் அதை இன்றளவும் எவ்வாறு செய்தனர் என்று பலராலும் அறிய முடியாத ஒன்றாக காணப்படுகிறது. 
 

கல்லணை

 
உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ?

மாமல்லபுரம் 

       
             கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா ?

அங்கோர்வாட் கோயில்

         
         உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது. திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும். இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும் .இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.

தொல்காப்பியமும் திருக்குறளும்

         
        5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது. ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது. பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது.
           
          2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர். இது போன்ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ? 


பூம்புகார் உலகின் தொன்மை

                  
         9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும். கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள்ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார். அதில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.

தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயில்

       கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை. 

    இன்னும் பல்வேறு சாதனைகளை தமிழன் செய்துள்ளான் அவைகளை நினைவுச்சின்னமாக நாம் போற்றி பாதுகாத்திட வேண்டும். ஏனென்றால் வரலாறு என்பது அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும்.அப்பொழுதுதான் நம் பெருமைகளை கண்டு வியந்து உலகமே பார்க்கும். 


“தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு”

Post a Comment

0 Comments