Ticker

6/recent/ticker-posts

HUMAN BODY (Anatomy) உங்க உடம்புக்குள்ள எவ்வளவு அதிசயங்கள் இருக்கு தெரியுமா…??

நம்ம சொந்த உடம்போட உண்மையான வியப்பூட்டுற சில விஷயங்கள்...!


      நமது உடம்பு என்பது மிகப்பெரிய பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் உடம்பு ஆரோக்கியமாக இருந்தால்தான் மனவலிமை பலம் அனைத்துமே நன்றாக இயங்கும் இல்லையென்றால் சரியாக வண்டி ஓடாது அதாவது உடம்பிலுள்ள ஒவ்வொரு பாகங்களிலும் சில வியப்பூட்டும் உண்மைகள் மறைந்துள்ளன அவைகளைக் காண்போம்.


1. நம்ம கை, கால்ல இப்ப தான் நகம் வெட்டின மாதிரி இருக்கும். ஆனா, கொஞ்ச நாளிலேயே வளர்ந்துடும். ஆனா, நம்ம நகம் புதுசா வேரிலிருந்து ஃபுல்லா வளர கிட்டத் தட்ட 6 மாதம் ஆகுமாம்.

2. பொதுவாவே, நம்ம எல்லாருக்கும் அடிக்கடி தோல் உரியும். நம்ம வாழ்நாள் முழுசும், உடம்பில இருந்து மொத்தமா எவ்வளவு தோல் உரியும்னு தெரியுமா. வாழ்நாள் முழுசும் நம்ம உடம்பில இருந்து உரிந்து விழுற தோலோட எடை கிட்டத் தட்ட 18 கிலோ…!!

3. நம்ம ஒவ்வொருத்தருக்கும் கண்ணோட கலர் வித்தியாசமா இருக்கும். பெரும்பாலும் எல்லாருக்கும் கறுப்பு கலர்ல தான் கண் கருவிழி இருக்கும். ஆனா, என்னதான் இப்ப கறுப்பா இருந்தாலும் நாம பிறக்கும் போது அது புளு கலர்ல தான் இருக்குமாம். உண்மை தாங்க, உலக்கத்தில் பிறக்குற பெரும்பாலான குழந்தைகளோட கண்கள் நீல நிறத்தில தான் இருக்குமாம். வெளி வெளிச்சத்தில இருக்கிற UV ஒளி (புற ஊத ஒளிக்கற்றை) தான் குழந்தையோட கண்ணோட ஒரிஜினல் கலரைக் கொண்டு வருமாம்.

4. எச்சில் எல்லாருக்கும் தெரியும். பொதுவாவே எச்சிலைப் பார்த்தா எல்லாருக்கும் அருவருப்பு வரும். ஆனா, உங்க வாழ்நாளில் எவ்வளவு எச்சிலை உங்க உடம்பு உருவாக்கும்னு தெரியுமா. ஒரு நாளைக்கு 0.75லிட்டர்ல இருந்து 1.5 லிட்டர் வரைக்கும் நம்ம வாயில எச்சில் சுரக்குதாம். ஒரு மனிதனோட வாழ்நாள் முழுக்க சுரக்கிற எச்சிலை வைச்சு, 2 நீச்சல் குளத்தை நிரப்பலாம்.

5. நம்ம மேல வியர்வை நாற்றம் வருதே அது வெறும் நாற்றம் இல்ல. ஒவ்வொருத்தரோட அடையாளம். உலகத்தில ஒவ்வொருத்தருக்கும் இந்த நாற்றம் மாறுபடுமாம். இரட்டையர்களைத் தவிற.

6. உங்களை உங்களாலேயே டிக்கிள் பன்ன முடியாது. புரியலயா.. கிச்சுக் கிச்சு… உங்களாலேயே உங்களை கிச்சு கிச்சு மூட்டிக்க முடியாது.

7. நம்ம எலும்புகள் எவ்வளவு வலுவானது தெரியுமா…? ஒரு பவுண்ட் காய்ந்த சிமெண்ட் கான்கிரீட், ஒரு பவுண்ட் மனித எலும்பு இதை ரெண்டுத்தையும் வச்சு டெஸ்ட் பன்னினதுல மனித எலும்பு கான்கிரீட்டை விட 4 மடங்கு வலுவானதுன்னு நிரூபனமாகி இருக்காம்.

8. நாம எதையாவது சுவைக்கனும்னா அந்தப் பொருள் முதல்ல எச்சில்ல கரையனுமாம். இல்லைன்னா, நம்மால சுவைய உணரவே முடியாது. நம்பலைன்னா எச்சில் இல்லாம டேஸ்ட்  பன்னி பாருங்க…

9. நம்ம உடம்பிலேயே ரொம்ப நீளமான உறுப்பு எது தெரியுமா….?? தோல் தான். நல்ல வளர்ந்த ஆணோட தோலை முழுசா நீட்டி அளந்தா 20 சதுர அடிக்கு வருமாம்.

10. நம்ம எவ்வளவு உயரமா இருந்தாலும், தூங்கும் போது கிட்டத்தட்ட 1 செ.மீ. உயரம் குறைஞ்சுடுவோம். காரணம், நம்ம முதுகெலும்புல இருக்கிற குறுத்தெலும்புகள் நாம் தூங்கும் போது, சுருங்கிடுமாம். 
 
11. ஒரு மனிதனுக்கு சரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.

12. கம்யூப்ட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளை நிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகிதம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.

13. ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால் அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.

14. 60 வயதாகும் போது நாக்கின் சுவை மொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.

15. மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடியதாகும்.

16. சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. 6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக்கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.

17. ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.

18. மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.

19. மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.

20. மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.

21. ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கும்.

22. பெண்களை விட ஆண்களுக்கு மூளை மிகப்பெரியது பெண்களை விட சுமார் 4000 உயிரணுக்கள் ஆண்கள் மூளையில் உள்ளதாம். 

23. பிறந்த குழந்தைகளுக்கு கருப்பு வெள்ளை நிறங்களை தவிர வேறு நிற வேறுபாடு தெரியாதாம். 


  உடம்பில் நடக்கக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும் சங்கிலித் தொடர்பு உள்ளது அதை ஒன்றோடு ஒன்று தொடர்ப கொண்டே உள்ளது
பிரிக்க முடியாதது செயலிழந்து விடும்.

                                நன்றி!

Post a Comment

0 Comments